கூடுபோல் வீடும் கூண்டுக்குள் வாழ்க்கையும்

கூடுபோல் வீடு,
வீடு மேல் பந்தல்,
பந்தல் மேல பரங்கிக் காடு,
படுத்துறங்கிய பாம்பு,
பாட்டுப்பாட வந்தது சேவல்,
பழுத்து தொங்கியது விண்ணில் ஞாயிறு.

மூங்கிலால் வேய்த வீடு,
முழுமையாய் புகுந்தது காற்று.
மண்ணில் பூசிய சுவரு,
மணக்கும் சானத்தால் மொழுவிய தரை.

முத்தத்திலே சப்தம்,
மூலையில் கிடக்குது,
சட்டியும் பானையும்,
ஓசை போடும் வானொலி,
ஓலம் இடும் நாய்,
அசைபோடும் ஆடு,
திண்ணையிலே,
இசைபாடும்கிளிப்பிள்ளை கூண்டிலே;
வசைபாடும் பாட்டி,
வம்பு செய்யும் அண்ணன்,
வீம்பு பிடிக்கும் குழந்தை,
விளையாடும் சின்னம் சிறார்கள்.

வரக் வரக் கென்றே கொத்தியே போகும்
குஞ்சி பொறித்த கோழி,
வீச் வீச் சென்ற குஞ்சுகளின் சப்தம்.

அன்னையின் பாசம்,
அடுப்பங்கரையில் வாசம்.
சமைக்கும் வேகம்
சாம்பலில் பல் தேய்க்கும் குழந்தை,
சந்தனம் மணக்கும் உடம்பு,
பயத்தம்பருப்புப் பொடியில் குளியல்.

கிணறு குளத்தில், குளியல்;
குதூகல விடியல்.

வயக்காட்டுக்கு புறப்பட இருக்கும் தலைவன்,
லெக்கு லொக்கு என்று இருமும்
இருமல் தாத்தா;
இதமான நீச்சத்தண்ணீர்.

மொழுகிய வீடு,
சானம் தெளித்த வாசலில்,
கோலம்;
சாம்புராணிவாடை;
சலிக்காத உழைப்பு;
கோலத்தைக்காண வந்த உதையம்;
கொத்தித் திண்ண குருவி;
கிழிந்த ஆடை;
கீத்தில் ஆயிரம் ஓட்டை;
ஒட்டிய உறவு;
ஓடாத நினைவு;
காசு தேடாத உலகம்;
கவலையில்லாத இதயம்;

கூடி வாழ்ந்த மணிதன்
சிதையாத கலாச்சாரம்;
கலகலப்பான கூட்டக்குடும்பம்;
கசப்பு இல்லாத வாழ்க்கை.
பழைய சோறு,
பழமைபேசும்
வெங்காயம்;
பலமான உணவு;
பார்த்து ஊட்ட அம்மா;
ஆசையான மனது;
அள்ளித் தந்த கரங்கள்;
சுவைத்தது கரங்கள்;
சுத்தமான தயிரு;
சுவை ஊட்டும் உறவு;
வீதிக்கு வராத மானம்;
விருந்து உண்ணும் வெட்கம்;
விரும்பியே தந்த பாசம்;
வீட்டுக்கு அருகே விளைந்த பயிர்கள்;
விட்டுக்கொடுக்காத உறவு;
விரட்டியே வரும் காற்று;
இரவை விரட்டிய,
பாவைவிளக்கு;
இருட்டுக்குப் பிறந்தது, குறட்டை;
விழுந்தது இரவும்;
இன்றைய வாழ்வு;
விடிவு காணத வாழ்க்கை;
நாகரீக மோகம்;
நசுங்கிய பாரம்பரியம்.
நெடுநேரக் கொறட்டை
விடியா மூஞ்சி;
பல்விலக்காத சோம்பல்
குடும்பம்.
குக்கர் சப்தம்,
கைபேசி உறவு,
கணினி வாழ்க்கை;
உறங்கிட நேரம் இல்லை
உறவுகளுடன்
பேசிட இல்லை நேரம்;
உறங்கும் மேசை நார்காலிகளே உறவினர்கள்;
தானாக பேசும் தொலைப்பெட்டி;
அழுக்கான வீடு;
அங்கும் இங்குமாய்;
சிதறிக்கிடக்கும் பாத்திரம், பொருள், துணிகள்;
வாங்கிக் குவித்த ஆன்லைன் பொருட்கள்
உதயம் தெரியாத விடியல்
சூரியன் உயர்ந்து நேரம் ஆச்சி;
சுத்தித்திரிய புறப்படுது பெருசு;
காற்றுப்புகாத ஜன்னல்;
ஏசி தரும் சுகம்;
குளிர்சாதனப் பெட்டி
அது குவிந்த கிடக்கும் குப்பைத்தொட்டி
குளிப்பது வாலித்தண்ணீர்
கொப்பளிக்கிது
ரசாயண நீரில்;
குடிப்பது
பாட்டில் தண்ணீர்;
விடிந்த பின்பு வசைபாட்டு;
மின்சாரம் போனால்
முடங்கிய வாழ்க்கை
வேர்த்தே கொட்டும் காற்று புகாத வீடு;

எசபாட்டுடன் எழுந்த குழந்தை;
ஆயத்த உணவு செய்யும் அன்னை;
அன்பு பாசம் இல்லா அன்னை தந்தை

அடங்காத குழந்தைகள்;
அம்மாவின் ஓட்டம்;
ஊட்டாத சோறு;
ஊட்டம், இல்லாத உணவு;
உற்றார் உறவினர் இல்லாத குடும்பம்,
பாசம் இல்லாத உறவு;
படி படி என்று ஓடிக்கொண்டே,
பாடம் படிக்கும் அம்மாமார்கள்;
பாடசாலைபோக குழந்தைகளின் ஓட்டம்;
வண்டிபிடிக்க ஓட்டம்
வாய்விட்டு சிரிக்க இல்லை நாட்டம்;
அரவேக்காட்டுத்தோசை;
அயல்நாட்டு பண்டத்தின் மோப்பம்;
நாகரீக மோகம்;
வேலைக்காரியின் ஆட்டம்;
வேலைக்கு போவதற்குள் போடும்;
அம்மா அப்பா ஆட்டம்,
பட்டிண வாழ்க்கை,
பட்டுப்போன வாழ்க்கை,
காசு பண தேடலில்,
நிம்மதியை இழந்த அடிமை வாழ்க்கை;
நிற்க நேரமில்லாத வாழ்க்கை;
நிதானமில்லாத வாழ்க்கை;
வியாபாரம் ஆன வாழ்க்கை;
நாகரீக வேகம்;
யார்தந்த சாபம்;
எல்லாம் போனது;
வெறுத்துப்போன ஓட்டம்;
நமபிக்கை இல்லாத நண்பன்
வேலைதேடும் இளைஞர்கள் கூட்டம்,
வழு இழந்தது பாரம்பரியம்;
வலைதளத்திலும், இணைய தலத்திலும் வாழ்க்கை;
கைபேசி வாழ்க்கை
கண்ணிருந்தும் குருட்டு வாழ்க்கை;
அழுகிப்போன நகரம், நரக வாழ்க்கை;
அழுகிப்போன நகரம், நரக வாழ்க்கை;
அழுத்துப்போன அழுத்தத்தோடு வாழ்க்கை
புழுத்துப்போன வாழ்க்கை
சாக்கடை அருகில் சாம் ராஜியம்;
பாசையின் வாடை;
பணப்பேய்கள் நடமாடும் நரகம்;
வாலிப ஆட்டம்;
வாழ்வாதாரம் இழந்த கூட்டம்;
வயிறுபுடைக்க உண்ணும் இன்னொரு கூட்டம்;
வாகனத்தின் ஓட்டம்;
வாய்குள் புகும் புகை மண்டலம்;
காசாக்கும் சேவைமையம்;
கழுகுபோல் காத்தக்கிடக்கும் பணப்பைத்தியங்கள்;
மரணவேதனை;
மனிதாபம் இல்லாத மனிதக் கூட்டம்;
வழுக்கிவிழுந்தது நமது
பாரம்பரியம்;
கூடி வாழ்ந்த மணிதன்;
கூண்டுப்பறவையாய் சிறையானான்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (17-Jun-21, 10:48 pm)
பார்வை : 102

மேலே