காதலா? கல்வியா?

*கவிதை ரசிகன்* எழுதிய....

*காதலா?*
*கல்வியா?*

மாணவிகளே!
ஆண்கள்
சாதித்ததில் எல்லாம்
பெண்கள் சாதித்தார்கள்
ஆனால்
சாதித்து ஆண்களோடு
பெண்களை
எண்ணிக்கையில்
ஒப்பிட்டுப் பார்த்தால்
ஏமாற்றமே மிஞ்சுகிறது ......

படிக்கின்ற திறமை
இருந்தும்
படிக்க வைக்கின்ற அளவுக்கு பொருளாதாரம் இருந்தும் பெற்றோரின்
அனுமதி இருந்தும் ......
பல மாணவிகள்
காதல் வசப்படுவதால்
பாதியிலேயே
கல்விப் பயணத்திற்கு
முற்றுப்புள்ளி
வைத்துவிடுகின்றனர் .....!

இது பெண் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு
மிகப் பெரிய தடைக்கல்லாக அமைந்து விடுகிறது.....

படிப்பில் சாதிக்கின்ற
பெண்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம்
படிக்கின்ற வயதில்
காதலின் பெயரால் திருமணம் செய்துகொள்வது
ஆண்களை விட
பெண்களே அதிகம்.....!!!

ஆணுக்கு இருப்த்து ஒனறு
பெண்ணுக்கு பதினெட்டு என்று
திருமண தகுதியை
அரசாங்கம்
தீர்மானித்து இருந்தாலும்
அது
விதியோடு தான் இருக்கிறது இன்னும்
வீட்டிற்குள் வரவில்லை ......

ஆண்களுக்கு
காதல் வந்தாலும்.....
தம் படித்து
ஒரு வேலையில் சேர்ந்து
சொந்த காலில்
நிற்கும் வரை
காதலியை
காத்திருக்கத்தான் சொல்கின்றனர்
கல்யாணம் செய்வது இல்லை அதனால் சாதிக்கின்றன.....

ஆண் காதலிப்பது
வீட்டிற்கு தெரிய வந்தாலும்
மிரட்டி அறிவுரை சொல்லி
மீண்டும் படிக்க வைக்கின்றனர்...

ஆனால்
பெண்கள் வீட்டில்
காதல் தெரியவந்தால்
மகன் காதலித்த பயன்
படித்து வேலையில் இருந்தால்
ஒத்த ஜாதியாக இருந்தால்
உடனே கல்யாணம் .....
ஒத்து வரவில்லை எனில்
வேறொரு பையனும் திருமணம....
இது பெண்ணுக்கு
பிடிக்கவில்லை என்றால் காதலனுடன் ஓட்டம் ......

எது எப்படியானாலும்
மாணவிகளே! உங்களுடைய முன்னேற்றம்தான் தடைபடுகிறது.....

ஆண்கள் பிடிவாதமாக
இருப்பது போல்
நீயும்
குறிப்பிட்ட அளவு படிக்கணும் ஏதேனும்
ஒரு துறையில் சேரனும்
அதன் பிறகே திருமணம் என்பதில் பிடிவாதமாக இரு
அதையே இலட்சியமாக எடுத்துக்கொள்......

நாளைய வரலாற்றில்
பெண்களின் சாதனைகள்
அதிக பக்கங்களை பிடித்திருக்கும்...

ஆண்களுக்கு இயற்கையாகவே சாதிக்க
பல வழிகள் உண்டு
பெண்களுக்கு செயற்கையாக தான் பல வழிகள்
உருவாக்க வேண்டும்
அதையும் நீயே தான்
செய்ய வேண்டும் ......

காதலா ?
கல்வியா?
என்று வரும்போது
கல்வியே! என்று முடிவு செய் காலத்தை வெல்லவாய்..!

காதல் இல்லாமல்
வாழ்க்கை இல்லைதான்
ஆனால்
காதலே வாழ்க்கை அல்ல...!

*கவிதை ரசிகன்*


நன்றி!

எழுதியவர் : கவிதை ரசிகன் (17-Jun-21, 9:14 pm)
பார்வை : 47

மேலே