சொல்வது ஒன்று செய்வது ஒன்றா

" *சொல்வது* *ஒன்று...செய்வது ஒன்றா?"*

(5 காய் மா புளிமா)

குடலழுகிப் போகுமென்றார் ! குடும்பமெலாம் அழியுமென்றார் !
...குடங்குடமாய் விற்கக் கொடுத்தார் !

உடலதுவோ கெடுமென்றார் ! ஊரதுவும் வெறுக்குமென்றார் !
...ஊரறிய ஊற்றிக் கொடுத்தார் !

விடமதுவோ ஏறுமென்றார்! விந்தணுவோ குறையுமென்றார் !
...விடமறுத்தால் ஆளை அழைத்தார் !

கடமையென மதுவினது கடுமைகளைச் சொல்லிவிட்டு
... கடைதிறந்து விட்டால் சரியா?


( *எழுசீர்க் கழிநெடில்* *ஆசிரிய விருத்தம்)*

மரு.ப.ஆதம் சேக் அலி

எழுதியவர் : PASALI (18-Jun-21, 6:00 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 60

மேலே