உனக்கு என்னஆனந்தமோ
ஏழிசையில் பொழியுது வீணையில் கானம்
ஏழுநிறத்தில் சிரிக்குது வானவில் ஓவியம்
ஏழுமலையில் உனக்காகப் போட்டது இந்தக்கோலம்
ஏழுசுரத்தில் சிரிக்காதே ஆமென்று சொல்சீக்கிரம் !
பழனிக்கும் ஒருமுறை சென்று வரவேண்டுமா
பக்குவமாய் சந்தனம்பூசி பஞ்சாமிர்தத்துடன் வரவேண்டுமா
வழுக்கைகளை பெண்கள் நிராகரிக்கும் காலங்களில்
வழுக்கையாய் என்னைப்பார்ப்பதில் உனக்கு என்னஆனந்தமோ ?