யாரு பணம்
இலவசமா
இரண்டாயிரம் வந்ததும்...
எவர் வசமோ
அதுவும் கூட போயிரும்...
விதிவசமா
நோய் வந்து புலம்பிடு ...
அது விஷமா
மாறு முன்னே தவிர்த்திடு ...
கும்பலா
வாங்கப் போனே
பணமெல்லாம்...
அது உன் பணமே
என்பதெல்லாம்
தெரியுமா?....
முகத்த மூடி
வாங்கப் போனா
தேவலம்...
அத கீழ இழுத்து
விட்டுச் சென்றா
நொம்பலம் ...
ஆயிரம்தான்
கிடைக்குமென்று
ஓடுற ...
ஏதாச்சும்
ஆயிடுச்சின்னா
வாடுற...
பல்லில்லா
வாய காட்டிச்
சிரிக்கிற....
பல்ஸ் போனா
நாடி கட்டுவத
மறக்கிற.
மரு.ப.ஆதம் சேக் அலி
களக்காடு.