நெல்லின் புலம்பல்

உலக கவிஞர்கள் சங்கமம்

நாள் : 18/06/2021



அன்று
சகதிக்குள்
தூவி விட்டாய்...
பொறுத்துக் கொண்டோம்...
நீ அகதியாகி விடக்கூடாது என்பதற்காக.

கதிர் முற்றி
தலை தொங்கிய நாளில் ...
எங்களை
அடித்துத் துவைத்துப்
பிரித்தெடுத்தாய்...
பாவம்...
உன் அடி வயிறு
பசியால் வாடிவிடக்கூடாது
என்றே பொறுத்துக்கொண்டோம்...

இன்று...
ஆவியில் வைத்து
அவித்தெடுக்கிறாய்...
பாவம்
உன் ஆவி போகக்கூடாது
என பொறுத்துக்கொண்டோம்...

இத்தனை
இன்னல்கள் பெற்று ...
சமையலில் மீண்டும்
வேகவிட்டு... வாட்டி...

எல்லாம்
பொறுத்துக்கொண்டோம்...

படையலுக்குப் போனபோது...
உன் உடலுக்குள் போய்
இரத்தத்தில்.... கலப்போம்
என... நம்பியிருக்க...

எங்களில் மிச்சத்தை
உண்ணாமல் ...

தரையில் சிந்தி
மதிக்காமல்...
மிதித்தே விடுவது
என்ன நியாயம்?

மரு.ப.ஆதம் சேக் அலி
களக்காடு.

எழுதியவர் : PASALI (18-Jun-21, 6:14 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 56

மேலே