முதல் காதல்

விழியோடு விழி மூட விரியுது கனவுகள்!
இதழோடு மொழி பேச மலருது கவிதைகள்!
பொன்மாலை மங்க வருகுது
இருள்!
பூவானம் தேன் தூவ பொழியுது
மாரி!
கடலோடு கதை பேச துடிக்குது
கரை!
வானோடு மண் கலக்க இசைந்து மழை!
காற்றோடு மூங்கில் கதைக்க
பிறக்குது இசை!
உயிரோடு உயிர் மௌனமாய் உரையாட அரும்பும்
முதல் காதல்!

எழுதியவர் : சுதாவி (18-Jun-21, 3:39 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : muthal kaadhal
பார்வை : 134

மேலே