கடைசி வரம்
கடவுளிடம்
கடைசிவரை
கண் நோக்கா வரம்
வேண்டியிருந்த
அவளும்,அவனும்...
இன்று எதிரெதிரே...
அன்பை மட்டும் எதிர்பார்த்து
அவள் பின்னே
சுற்றித் திரிந்திருந்த அவன்...
அன்பு கசிந்து
காதலாகிப் போகுமென்ற
அச்சத்தில் அவனை
வெறுத்து
புறம் தள்ளியிருந்த அவள்...
இருபது வருட இடைவெளியில்
இருவர் உலகமும்
வேறு வேறாய் மாறியிருக்க...
உள்ளம் பேசிய இவ்விடம்
உதடுகள் எதையும் உரைக்கவில்லை...
உரைக்கப்படாத வார்த்தைகள்
முட்டி மோதி கண்ணீராய்
கரை புரள...
நடக்கத் தொடங்கினர்
இருவரும்
கண்டும் காணாமல்
வந்த வ(லி)ழியில்...
-உமா சுரேஷ்