ஏங்கி தவிக்கிறான்
உன்னுடன் சேர்ந்து அந்த நிலவை ரசிக்க !
உன் கை கோர்த்து தோழ் சாய்ந்து சாலையில் நடக்க !
உன் மார்பில் சாய்ந்தபடியே இதயம் ....
எனக்காக துடிப்பதை கேட்க !
உன் மடியில் தலை சாய்ந்து கதைகள் பேச !
அப்படி பேசியபடியே உன் மடியில் உறங்க !
என் விடியலும் என் நாளின் முடிவும் ....
உன் முகம் மட்டுமே பார்க்க !
சண்டைகள் போட்டு பின் கொஞ்சியும் , கெஞ்சியும்...
சமாதானம் கொள்ள !
உன்னை சார்ந்தே நான் என்று .....,..
ஒரு ஒரு வினாடியும் ஏங்கி தவிக்கிறான் !!!
............என்னவனே .......!!!