காதல் முகம்
மின்னல் போல் தோன்றியவளே
திரையிட்டு முகத்தை மறைத்தவளே
அழகை காட்டாமல் சென்றவளே
என் மனத்தில் காதல் அம்பு விட்டவளே
உன் நிழலாய் என்னை அழைத்தவளே
கனவை திருடி மின்னல் போல் மறைந்தவளே
என் உயிரில் கலந்த காதல் தேவதையே
தவமாய் கிடைத்த காதலியே
காலம் முழுவதும் காத்திருப்பேன்
உன் இதயத்தில் காதல் பூ வாய் மலர்ந்து இருப்பேன்