385
எவராவது ஒருவர் வாழ்விலேனும்
புரியாத புதிராய் இருப்போம் நாம்....
எவராவது ஒருவர்
விடைத்தெரியா கேள்வியாய்...
தொடராய் தொடர்வார்
நம் வாழ்விலும்...
எவராவது ஒருவர் வாழ்விலேனும்
ஏதோவொரு இடைவெளியை
பூர்த்தி செய்யும்
அடைவாவோம் நாம் ......
எவராவது ஒருவர்
இடைபுகுந்து
சில வெற்றிடங்களை நிரப்புவர்
நம் வாழ்விலும்.....
எவராவது ஒருவர் வாழ்விலேனும்
ஈடுசெய்ய இயலா இடத்தை
பெற்றிடுவோம் நாம்....
எவராவது ஒருவர்
ஈடுயிணை இல்லா உறவாவார்
நம் வாழ்விலும்.....
விருப்பம் விகற்பம் நிறைந்த உறவுகளால்
புதிர்,புரிதல் , பிரிதல்
சதிர், சரிதல், சொரிதல்
அதிர், அரிதல், அரித்தல்
தொடரியாகி நகர்வதே வாழ்கை
இதில் புதுப்புது திருப்பங்கள் இல்லையேல்
ஏது சுவை...?