காதலி நினைவுகள்

இரவெங்கும் உன் நினைவுகள் என்னை சூழ
காலை பொழுது உன் உரைக்கு ஏங்குகிறது..
நீ என் காதலை நிராகரித்த போதும், பொய் நட்பு கான என் மனம் ஏங்குகிறது...
நம்முள் பேச்சுக்கள் குறைந்த போதும், உன் நலனை நினைத்து மனம் துடிக்கிறது..
உனக்கு நான் இல்லை என்ற போதும், நல்ல வாழ்க்கை அமைத்து தர என் மனம் ஏங்குகிறது...
உனக்கு வரன் பார்க்கும் போது, உன் வரனாக நான் அமர என் நாடி துடிக்கிறது...
இது அனைத்தும் கனவு என்று தெரிந்தும், உன்னுடன் வாழ என் உயிர் துடிக்கிறது..
-- ஜெயபிரகாஷ்

எழுதியவர் : ஜெயப்ரகாஷ் கே வி (27-Jun-21, 3:25 am)
சேர்த்தது : jayapragash
Tanglish : kathali ninaivukal
பார்வை : 169

மேலே