தக தக தக உறவு
தக தக தக உறவு,
தத்தழிக்கிது வயது;
பட பட மனசு,
பம்பரமாய் சுத்துது,.
இந்த வயது
கிரு கிரு பருவம்;
கிறுக்கனாக்குது உன் உருவம்;
வெட வெட குளிரு,
வெருங்கையால் அணைத்தாலே;
வெடிக்குமே இந்த குளிரும்.
சல சல நீரு,
சல்லாபத்தை நீயும் பருகு;
மட மட தனிமை,
மல்லுக்கட்டுது உனது இளமை,
சிடு சிடு மூஞ்சி,
சிரிச்சா என்ன போச்சி;
வள வள பேச்சி,
வம்புக்கு இழுக்காமல் ,
இருந்தால் என்ன போச்சி;
அடியே, அடியே,
எனக்காக பிறந்தவளே;
என் மனசுக்குள்ள புகுந்தவளே;
உன் அழகைச் சிந்தியே,
என்னை நீ உசுப்புறியே;
உன் விழியால் கட்டியே,
உசுர வாங்கிறியே;
சல சல பேச்சி,
சலிச்சி போச்சி உன் பேச்சி;
அட அடடா,
பசி எடுத்து துடிக்கிறியே;
பறக்கா வெட்டியா பறக்கிறியே;
பல்லக்காட்டி இழிக்கிறியே;
அட இளம் பெண்ணின் ஏக்கம் தான்,
எடுத்துச் சொல்ல வெட்கம் தான்,
மௌனமும் ஒரு பாசைதான்,
மனசுக்குள்ள அடைந்து கிடக்குது ஆசைதான்,
வெளியில் போடுவதும் வேசம் தான்,
வெட்கத்தை விட்டு,
வெளியில் சொல்ல தயக்கம் தான்,
தள தளவென்றே ததும்பும் பருவம்,
தடி எடுத்து அடிக்காமலே அரும்பும்,
துறு துறு விழிகள்,
துரத்திவருகுது இந்த ஆசைகள்.
அடியே, அடியே,
அடம்பிடிப்பவளே;
அள்ளிப்பருகும் நீராய் நீயிருக்க,
அடி எடுத்து வைக்கத் தயங்கிறியே;
விடு, விடு, என்றே வீம்பு பிடிச்சவளே;
விடிவெள்ளியும் வந்தாச்சி;
வீதியிலே கோலம் போட்டாச்சி;
விளக்கு வெளிச்சத்தை விளக்கி;
வந்து விருந்து படைத்தா என்னாச்சி .
அட அடாஆண் அழகா,
எட்டிப்பார்க்க முடியலையே,
ஒட்டி ஒரச துடிக்கிறியே,
வெல வெல என்றே நடுங்குறியே,
சொத சொதன்னு சொதப்புரியே,
சோறு கிடச்ச இடமே,
சொர்க்கம் என்று கிடக்கிறியே.
ஏலேலோ போடுது என் மனசு,
எனக்குள்ளே கிடந்து துடிக்கிது தவிப்பு,
பொம்பளைங்க மனசு இது,
பொசிக்கிப்போட முடியாது.
வாயக்கிளர வேண்டாம்,
வயச போர்வையாக்க வேண்டாம்,
வீம்புக்கு வந்தால்,
வம்பு வந்தே சேரும்,
விடலைப் பருவ விளையாட்டு,
விஷப்பரிச்சை வேண்டாம்,
விடிந்ததும் போதும்,
விருந்துன்ன தவித்ததும் போதும்,
விரு விருன்னு நடையக்கட்டு.
அடியே அடியே,
அழகின் அழகியே,
ஆளாகி அசத்திரியே,
அக்கம் பக்கம் வந்தாலே,
அடம் பிடிக்கிறியே;
அட
எதுக்குபுள்ள ஏமாத்துர உன்மனச,
அட இருக்குபுள்ள,
என்மேலே உனக்கு,
ரொம்ப ஆச,
எடுத்ததுக் கெல்லாம் வெடுக்குங்கிற,
எட்டிப்போனலே,
ஏங்கி கண்ணீர் சிந்துர.
அடக் கிறுக்குப் புள்ள,
கிறுக்கு புள்ள,
கிளிஜோசியம் தான்,
பார்த்தேன் புள்ள,
அட
தக தக தக உறவு,
தத்தழிக்கிது வயது,
பட பட மனசு,
பசியாத்த துடிக்குது,
அழகு,
புது புது நினைப்பு,
புத்தாடையாய் ஜொலிக்குது உடலு.
புத்திகெட்டு கிடக்குது,
உனக்கு ,
புலம்பி தவிப்பது எதுக்கு,
துரு துரு பார்வை,
தூரத்தில் இருந்தே ஏத்துர போதை,
கல கலப் பேச்சி,
கண்ணை நீ அசைத்தால் போச்சி,
அடியே, அடியே,
அருவாமனைக் கண்ணாலே அசத்துற,
அடிவயிற்று பசிய போக்க மறுக்குற,
அந்திப்பொழுதாய் விழ மறுக்குற,
கெஞ்சி கெஞ்சி வந்தால்,
கொஞ்சாமல் மிஞ்சிற,
மின்சாரக் கண்ணாலே,
இழுக்குற,
மிச்சம் மீதி வைக்காமலே,
உசுர உறியிர.
வச்ச கண்ண எடுக்காம பார்த்தே,
வயசுக்கு வந்த பொண்ண வசியம் பன்ன பாக்குற,
வற வறன்னு வரட்டுத் தவளையாக கத்துற,
வராத ஆசையெல்லாம்,
வாய் பேசியே தினிக்கிற,
அட போயா நீயும் போயா,
அட பொட்டப்புள்ளையைச் சுற்றிவருவது சரியா.
அட வாடி நீயும் வாடி,
அட வாயாடி,
வயசுக்கு வந்தவ நீயி,
வருடம் திரும்பினா
நீயி,
என் பொண்சாதி தாயி,
அட ஏயா, ஏயா இப்படி பைத்தியம் பிடித்து திரிவதும் ஏயா,
அடப் போயா, பொல்லாப்பு ஏயா,
பொசுக்கு பொசுக்குன்னு,
பேசாம,
பொட்டபுள்ளை மனசுக்குள்ள குடிபோயா,
வயக்காட்டு நரியாட்டம் ஊலை விடாதே,,
வம்ப நீயும் விலைக்கு வாங்காதே,
அட தக தக தக உறவு,
தத்தளிக்குது வயது,
பட பட மனசு,
பட்டாம் பூச்சாய் பறக்குதது மனசு.