பதின் பருவ காதல்
அரசமர பிள்ளையார்
ஆலமரக் கிளி என அனைத்தையும் மறந்தேன்
அவன் யெனைக் கண்ட நொடி...ஆம்
அவன் காதல்பார்வை பரவசமூட்டியது...
ஏக்கபார்வை எனை மாற்றியது
குழந்தை த்தனம் உடைந்து
கோப பார்வை கொண்டேன் முதலில்
பாவம் என பரிதவித்தேன் அவனின் விடாமுயற்சி கண்டு
நாளடைவில் ஏங்கினேன் எப்போது வருவானென....
அவனை காணா பொழுது கனவுபொழுது ஆனது
பதின்பருவ பட்டாம்பூச்சி வட்டமடித்தது இளங்கன்றுஅவன் செயலியில் ( App)
செய்த செய்கை பார்த்து
ரசித்தேன் நான்...
விருப்பம் கொண்டு விளையாட்டாய்
பின்தொடர்ந்து..
விதி வழிச் செல்கிறேன்
விடைதெரியாமலே....