வசந்தத்திற்காக காத்திருக்கும் காலங்கள்

வசந்தம் வந்துவிடும்
காத்திருக்கும் காலங்கள்

காலங்களுக்கு என்ன
அக்கறை?
வசந்தத்தை மட்டும்
வரவேற்பதற்கு?

புது மொட்டுக்களாய்
மலர்ந்த மலர்
கூட்டங்களை காணவோ?

மேக கூட்டங்கள்
மடியில் மழை
நீரை நிறைத்து
அதன் மீது வாரி
விட்டு செல்வதாலோ?

இதனை எல்லாம்
கண்டு களித்து
இரசித்து செல்லும்
மனித முகங்களை
பார்க்கத்தானோ

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (4-Jul-21, 1:50 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 103

மேலே