இவளா அவள், அவளா இவள்
கவிதையை ரசிக்கத்தெரியாத கவிதாயினி இவள்;
காகிதம் தின்னத்தெரியாத கழுதை இவள்;
கனவை ரசிக்கத் தெரியாத காரிகை இவள்;
கண்ணீர் வடிக்கத் தெரியாத பெண் இனம் இவள்;
சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தெரியாத அடிமையிவள்;
சுவை அறியாத உணவு இவள்;
புகைக்காத நெருப்பு;
புளிக்காத புளியும் இவள்;
பகைக்காத பகைவன் இவள்;
உரைக்காத சொற்பொழிவு இவள்;
உறிக்காத மேகம் இவள்;
உறையாத பனியும் இவள்;
மினுக்காத நட்சத்திரம் இவள்;
முழங்காத இடி அவள்;
மின்னாத மின்னல் இவள்;
பசிக்காத உணவு அவள்;
படுக்காத பாயும் இவள்;
பார்க்காத நிலவும் இவள்;
நடக்காத பதுமையிவள்;
நடிக்காத நடிகையிவள்;
படிக்காத பாடம் இவள்;
பிறக்காத மோகம் இவள்;
உரைக்காத மொழியும் இவள்;
முழிக்காத விழியும் இவள்;
வழியாத கண்ணீரும் இவள்;
கசங்காத பூவும் இவள்;
இசைக்காத இசை இவள்;
மயக்காத அழகும் இவள்;
நினைக்காத நினைவும் இவள்;
நனைக்காத நீரும் இவள்;
நகைக்காத சிரிப்பும் இவள்;
துறக்காத துறவியிவள்;
திறக்காத கதவும் இவள்;
சுவைக்காத இனிப்பும் இவள்;
இனிக்காத பழரசம் இவள்;
கசக்காத வேம்பும் இவள்;
குறைக்காத நாயும் இவள்;
கலையாத கூந்தல் இவள்;
அரிக்காத கரையான் இவள்;
ஜொலிக்காத வைரம் இவள்;
உதிக்காத சூரியன் இவள்;
பிடிக்காத காவியம் இவள்;
பரிக்காத பூவும் இவள்;
புரியாத பாடம் இவள்;
மடியாத சேலையிவள்;
சமைக்காத சாதம் இவள்;
சிக்காத கோபம் இவள்;
திகைக்காத திகைப்பு இவள்;
பிரியாத திசையும் இவள்;
சிரிக்காத பல்லும் இவள்;
சிலையில்லாத கோவில் இவள்;
வடிக்காத சிலையும் இவள்;
மறையாத நிழல் இவள்;
அண்டாத பயமும் இவள்;
அள்ளித்தராத பாசம் இவள்;
அள்ளாத பாத்திரம் இவள்;
அடிக்காத சாட்டை இவள்;
ஓடாத ஓட்டம் இவள்;
ஒடியாத மூங்கில் இவள்;
ஒட்டாத பொட்டும் இவள்;
மெட்டுக்கு போடாத இசையும் இவள்;
மொட்டில்லாத பூவும் இவள்;
கூடாத கூட்டம் இவள்;
ஆடாத ஆட்டம் இவள்;
கொட்டாத மழையும் இவள்;
மௌனமான ராகம் இவள்;
மொய்க்காத இனிப்பும் இவள்;
தாங்காத கனியும் இவள்;
தொடாத உறவும் இவள்;
சொட்டாத தேனும் இவள்;
கொத்தாத கிளியும் இவள்;
தூங்காத உறக்கம் இவள் ;
தாங்காத துக்கம் இவள்;
வாங்காத உதையும் இவள்;
பறக்காத பறவையிவள்;
பார்க்காத பாதையிவள்;
பழகாத உறவும் இவள்;
பயிர் நிற்காத வயலும் இவள்;
பாயாத ஆறும் இவள்;
பயந்த புலியும் இவள்;
வார்க்காத வார்ப்பு இவள்;
வரையாத சித்திரம் இவள்;
விலகாத திரைச்சீலை இவள்;
இவளா அவள், அவளா இவள்;
அப்படியே அதிசயத்தின்
ஆச்சரியம் இவள்.