பெண்ணுக்கு செய்த பாவத்தால் பெண்ணாலே அழிந்தார்
இந்த சிறுகதை தூங்காநகரம் மதுரையில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது. மதுரை மாநகரை சேர்ந்த காசி என்பவரது வாழ்க்கையை பயணத்தில் தன் இளமைக்காலங்கள் மற்றும் பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்து படிப்புகளையும் மதுரையில் சிறந்த முறையில் படித்தார். சாதாரணமான குடும்பம் காசியின் தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட்டார் தாயின் அரவணைப்பில் வாழ்ந்தார் காசி இவருடன் ஒரு தம்பி உண்டு. தன் படிப்புகளை முறையாக படித்து முடித்தவர். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். படிப்பும் சூப்பர் என்று சொல்லமுடியாது சாதாரணமாக படிப்பார். ஆனால் காசியின் நண்பர்கள் வட்டம் பெரியது.
அனைவரும் நித்தம் மதுரை மாநகரை வட்டமிடுபவர்கள். விடுமுறை காலங்களின் வெளிவரும் அனைத்து சினிமாவையும் பார்த்துவிடுவார்கள். காசி அம்மாவுக்கு செல்லப்பிள்ளை இவர்பார்ப்பதற்கு கலையாக இருப்பதால் படிக்கும் காலத்தில் பல பெண்கள் இவரை வட்டமிட்டனர். ஆனால் காசி யாரையும் காதலித்தது கிடையாது. காசியின் பழக்கம் ஜாலியாக அனுபவித்து அத்துடன் கழட்டிவிடுவதுதான் பழக்கம். ஒருவழியாக காசி தனது இளங்கலை பட்டத்தை முடித்தார். அதற்குமேல் அவருக்கு படிக்க குடும்பத்தில் வசதி கிடையாது. தனது ஊரிலேயே ஒரு சாதாரண ஹோட்டலில் பில் போடும் வேலையில் சேர்ந்தார். புத்திசாலியான காசிக்கு பல மொழிகள் தெரியும். இவர் வேலை செய்யும் ஹோட்டலுக்கு பெங்களூரை சேர்ந்த ஒருவர் வந்தார் அவர் இவரது திறமையை பார்த்து வியந்து போய் தம்பி உன்னால் பெங்களூருக்கு வேலைக்கு வரமுடியுமா என்று கேட்டார். அதற்கு காசியும் முடியும் நான் என் அம்மாவிடம் சொல்லிவிட்டு அவர்களையும் அழைத்து கொண்டு வருகிறேன்.
காசியும் ஓரிரு நாட்களில் மதுரையில் இருந்து பெங்களூர் சென்று ஒருவழியாக வேலையில் சேர்ந்தார். அவருக்கு வழங்கப்பட்ட வேலை குமாஸ்தா. காசி மிகவும் சுறுசுறுப்பாக நேரம் பார்க்காமல் வேலை செய்பவர். புதிதாக வேலைக்கு சேர்ந்த அலுவலகத்தி கணக்காளர் இவருக்கு நெருங்கிய நண்பர் இருவரும் சேர்ந்து அலுவலகத்தையே ரௌண்டு கட்டினார்கள். அலுவலகத்தில் இவர்கள் இருவரும் சொல்வதுதான் சட்டம். காசியின் தம்பி பெங்களூரில் ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். காசியும் அலுவலகத்தில் கடுமையாக உழைத்ததால் முதலாளிக்கு இவர் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டது. அலுவலகத்தில் புதிதாக மேலாளர் வந்தால் கூட இவர் சொல்வதைத்தான் கேட்கவேண்டும். காலம் செல்ல செல்ல அலுவலகத்தை வீடாக மாற்றிக்கொண்டார். அலுவலகத்திலேயே இரண்டு செட் ஆடைகள் வைத்திருந்தார். முதலாளிக்கு காசி மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டதால் அவருக்கு பல புதிய பொறுப்புகளை கொடுத்தார். காசிக்கும் வயது முதிர்ச்சி அடைந்து கொண்டேயிருந்தது ஆனால் திருமணத்தை பற்றி அவர் யோசிக்கவில்லை. அலுவலகத்தில் யார் வேலைக்கு எடுத்தாலும் இவரது அனுமதி இல்லாமல் பணி அமர்த்தமுடியாது.
முதலாளியின் இவர் சொல்வதையே வேதவாக்காக கேட்பார். நாளடைவில் அலுவலகத்திற்கு வரும் பெண்களை சீண்டி சில்மிஷம் செய்வதே இவரது முக்கிய வேலையாக இருந்தது பெண் பணியாளர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்கள் மீது ஏதாவது குறை சொல்லி முதலாலியை நம்பவைத்து அவர்களை வேலையில் இருந்து தூக்குவார் இப்படி பல வேலைகளை செய்தார். இவர் எது தேவை என்று கேட்டாலும் முதலாளி முதலில் செய்துவிடுவார்.
ஒரு கட்டத்தில் முதலாளி காசியை கண்காட்சி மற்றும் அலுவலகத்துக்கு தேவையான பொருட்கள் வாங்க வெளிநாடுகள் அனுப்பினார். இந்த வாய்ப்புகள் மூலம் காசி பல நாடுகள் சென்றுள்ளார். காசி எல்லாரிடமும் அருமையாக பேசி அனைத்தையும் எளிதாக சாதிப்பவர். வெளிநாடுகளுக்கு செல்லும்பொழுது மழை வெயில் பார்க்காமல் சுற்றிவந்து தங்குவதும் சாதாரண ஹோட்டலில் தங்கி நிறுவனத்துக்காக கடுமையாக உழைத்தார். இவர் எந்த நேரத்தில் பணம் தேவை என்று கேட்டாலும் உடனே கொடுத்துவிடுவார் முதலாளி. காசியின் அம்மாவுக்கு வயது ஆகிக்கொண்டே போனது தம்பி படிப்பை முடித்துவிட்டு வேலையில் சேர்ந்தார். இப்பொழுது வீட்டில் இருவர் வருமானம் மேலும் அலுவலகத்தில் அதிக கிம்பளம் கிடைத்தது. பணம் அதிகம் சேர்ந்ததால் பெங்களூரில் ஒரு சின்ன வீடு வாங்கினார்.
வீட்டில் காசி மற்றும் அவர் தம்பி இருவருக்கும் திருமண வயது ஆகிவிட்டது. ஆனால் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் காலத்தை கடத்தினர். முதலாளிக்கு இவர் மீது அதிக நம்பிக்கை இருந்ததால் இவரை மற்ற கிளைகளில் பிரச்னை ஏற்பட்டால் அனுப்பினார். இப்படித்தான் தொழில் சாலையில் ஏற்பட்ட லேபர் சம்பள பிரச்சனைக்கு காசி அனுப்பப்பட்டார். காசி தொழிலாளிகளிடம் அதிகம் பேசினார். இவரது பேட்சால் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இப்படி தொழிற்ச்சாலை வேலைநிறுத்தத்தில் இருக்கும் பொழுது ஒரு ஏக்ஸ்போர்ட் கண்டைனர் வந்து விட்டது அதை அன்று கண்டிப்பாக அனுப்பியாக வேண்டும் காசி உடனே யோசனை செய்து தன்னை முதல் நபராக அனைத்து சக ஊழியர்களையும் சேர்த்துக்கொண்டு கன்டைனரை ஏற்றினர் இதை பார்த்த லேபர் ஆண் பெண் அனைவரும் ஒடி வந்து காசியை தொடப்பதால் அடித்தனர் அதையும் காசி பொருட்படுத்தாமல் வேலை செய்தார்.
காசிக்கு வயது அதிகம் ஆனதால் சபலம் அதிகரித்தது உடனே மதுரைக்கு சென்றார் தனக்கு பழக்கமான பெண்ணை தன் காரிலேயே பெங்களூருக்கு அழைத்துவந்தார். பெங்களூர் முழுதும் அவரை கூட்டிக்கொண்டு சுற்றிவந்தார். கணவன் மனைவி மாதிரி பழகினார். ஒருகட்டத்தில் அலுவலகத்தையே வீடுபோல் பயன்படுத்தினர். இவரோடு வந்த அந்த பெண் காசி இடம் இருந்து பணம் புடுங்குவதில் கூறியாக இருந்தார். கா சியும் தனக்கு தேவை படும்போதெல்லாம் அவரை அழைத்துவந்து ஊரை சுற்றுவார் தன் காமத்தை தனித்துக்கொள்வார். ஏன் இருவரும் தாளிக்காட்டாத கணவன் மனைவி என்று சொல்லலாம். காசி எங்கு சென்றாலும் தன் காரிலேயே செல்வர். ஏவ்வளவு தூரமாக இருந்தாலும் காரில் தான் செல்வர் இப்படித்தான் ஒருமுறை பெங்களூரில் இருந்து மும்பைக்கு தன் உறவினர் பசங்களோடு காரிலேயே பயணித்தார். இப்படி செல்லும்பொழுது பாதிவழியில் ஒரு இடத்தில் விபத்து ஏற்பட்டது கார் பயனற்று போனது ஆனால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். காரை விபத்து நடந்த இடத்திலேயே விட்டுவிட்டு பஸ்சில் பயணத்தை தொடர்ந்தனர். மும்பை பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் பெங்களூர் வந்துசேர்ந்தார். காசி எப்போழுதும்போல தான் சொல்வதை கேட்காதவர்களை முதலாளி இடம் போட்டுக்கொடுத்து வேலையில் இருந்து அனுப்பினார்.
இப்படி அனைத்தும் சாதித்துக்கொண்டிருந்த காசி வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது பிறர் கொடுத்த புகாரை முதலாளி நம்ப ஆரம்பித்தார் அதன் பிறகு காசிக்கு அனைத்திலும் இறங்கு முகம் தொடங்க ஆரம்பித்தது. காசியின் ஆதிக்கம் படிப்படியாக குறைந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் காசியின் தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார் சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்தார். தாயய் இழந்ததால் காசிக்கு சிறிது காலம் சிரமமாக இருந்தது ஆனால் அதையும் சமாளித்தார். இவருக்கு திருமணம் ஆகாததால் இவரது தம்பிக்கும் திருமணம் ஆகாமல் போனது. இருவரும் தனியாக இருந்தனர். அலுவலகத்தில் வேறு இவர் மீது மேலும் மேலும் பல குன்றங்கள் அரங்கேறின. முதலாளிக்கு தொழில் சரிவாள் கடும் கோபத்தில் இருந்தார். ஒருநாள் திடீரென்று காசியை முதலாளி தனது அறைக்கு வரச்சொன்னார் காசியும் உடனே சென்றார் அப்பொழுது இருவருக்கு வாக்குவாதம் காரசாரமாக போய்க்கொண்ட்டிருந்தது இறுதியாக முதலாளி காசியை பார்த்து தங்களை இன்றில் இருந்து பணியில் இருந்து விடுவிக்கிறேன் என்று சொன்னார். காசியும் வேறு வழி இன்றி அங்கிருந்து நகர்ந்தார். ஆனால் காசி பல வருடம் அலுவலகத்தில் பணி செய்ததால் செட்டில்மண்ட் கேட்டார் அனைத்தும் கொடுக்கப்பட்டது. மேலும் தனது பி எப் பணத்தையும் முழுமையாக பெற்றார். அனைத்தும் சேர்த்து பார்த்தால் காசிக்கு கிடைத்தது பல லட்சம் இருக்கும். ஆனால் காசிக்கு காம இச்சை அதிகம் இருந்ததால் மீண்டும் மதுரைக்கு சென்று தனக்கு நெருக்கமான அந்த பெண்ணை கூட்டிவந்து கணவன் மனைவி மாதிரி இருவரும் திரிந்தனர். காசி தன்னை பற்றியும் சமூகத்தை பற்றியும் கொஞ்சம்கூட கவலை படவில்லை. காசியின் சேமிப்புகளும் குறைந்துகொண்டே இருந்தன. இந்த சமயத்தில் காசி உடைய தம்பிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இப்பொழுது தம்பியையும் இழந்து வேலையையும் இழந்து தனிமையில் சுத்திவந்தார்.
சிறிதுகாலம் தம்பி கவலை இருந்தது அதுவம் நாளடைவில் மறைந்துவிட்டது. மீண்டும் அந்த பெண்ணுடன் காசி சுற்ற ஆரம்பித்தார். அந்த பெண் இவரிடம் இருந்த அனைத்து பணத்தையும் கரைத்து முடித்துவிட்டார். காசியிடம் இனி பணம் இல்லை என்பதை உணர்ந்த அந்த பெண் காசியிடம் இருந்து நழுவி மதுரைக்கு சென்று விட்டார். தன்னுடைய தீய பழக்கத்தால் அனைத்து பணத்தையும் காசி இழந்துவிட்டார் இறுதியாக மிஞ்சியது அவர் பலவருடங்களுக்கு முன் வாங்கிய வீடு மட்டும் தான். காசிக்கு நடப்பு காலத்தில் கடுமையான பண பற்றாக்குறையால் அவதிப்பட்டார். சாப்பாட்டுக்கே கஷ்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தினம் கோவில், உறவினர் வீடு நண்பர்கள் வீடு என்று உணவுக்காக சுற்றி திரிந்தார். நம்மை அழித்தது காமம் மற்றும் ஆணவம் என்ற மாயை என்பதை உணர்ந்த காசி இப்பொழுது முழு சந்நியாசியாக மாறி கோவில் கோவிலாக சுற்றுகிறார். வயது காலத்தில் காசி செய்யத தவறுகள் கொஞ்ச நெஞ்சமில்லை ஆணவத்துக்கும் திமிருக்கு அளவே இல்லை அனைத்திற்கும் இப்பொழுது அனுபவிக்கிறார். அவர் பெண்களுக்கு செய்த பாவத்திற்கு கடைசியில் பெண்ணாலேயே அழிந்தார்.