பிரிவின் துயர்

மரிக்கொழுந்தே!! அடி மரிக்கொழுந்தே!!
தினம் வாடுறன்டி மாமன் உன்ன இழந்து,
வார்தையில்ல என் வலிய சொல்ல
என் நெனப்பெல்லாம் அடி நீதான் புள்ள...

இதயத்தின் அறையில்
நீ இருக்கின்ற வரையில்
ஆனந்த மழைதானடி,
காலத்தின் கோலம்
மாறும் என்னாலும்
என் காதல் மாறாதடி,

ஒலியோடு நிலவு வருகின்ற பொழுது
வானுக்கு சுகம்தானடி,
காலத்தின் போக்கில் கரைகின்ற பொழுது
வாடும் என் மனம்தானடி,
இது காட்சியின் பிழையோ,
காண்பவர் குறையோ,
யார் வந்து சொல்வாரடி…

என் வானில் நீ பறக்க,
உன் வாழ்வில் நான் இறக்க,
விதி எழுதி வைத்தானடி
இறைவன்
அதை உன் கையில் கொடுத்தானடி..

எழுதியவர் : செ.சீ (16-Jul-21, 5:29 pm)
சேர்த்தது : cheenu
Tanglish : pirivin thuyar
பார்வை : 315

மேலே