வழிபடுங்கள்

இயற்கை உருவானது
எப்படி என்று அரிதியிட்டு
எவராலும் கூறயியலாது

படைத்து காக்கும் இயற்கையோ
பாழ்படும்போது, சில உயிர்களை
பறிக்கும், மற்றதை வாழவிடும்

இயற்கைக்கு பின் தான்
இறைவனும்
அடியெடுத்து வைத்திருப்பான்

மனித குலத்தை
மேம்படுத்த வழிகாட்டியது
மதங்கள் தானே

மதங்களை தோற்றுவித்த
மாந்தர்கள் இறைவனை
படைத்து வழிபட்டார்களோ !

தாய் மனம்போல
தூய மனம் வேண்டி—இறைவனுக்கு
அபிஷேக ஆராதனை செய்தார்களோ !

நல்லது நடந்தால்
நாம் செய்த புண்ணியமென்றும்,
இல்லையென்றால் விதி என்பர்

கண் எதிரே கடவுள்
கள்வர்களை தண்டித்ததுமில்லை
நல்லவர்களை காத்ததுமில்லை

உங்களின் மனசாட்சி தான்
உண்மையான இறைவன்-அவனை
உள்ளத்தில் வைத்து வழிபடுங்கள்

எழுதியவர் : கோ. கணபதி. (18-Jul-21, 2:52 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 54

மேலே