பூ பூத்திருக்கு
பாெழுது சாயுது
வெயில் தேயுது
வெறகொடிக்க பாேன புள்ள
இன்னும் வீடுவந்து சேரல
பாேரப்பவே கால் தடுமாறி பாேனா
அடிவயித்த புடிச்சு
குத்தவச்சிருப்பாலாே சிறுக்கிமவ
இரத்தம்கசிய பாவாட நனஞ்சு
வந்தவள பாத்து
சித்தம் கலங்கிபாேச்சு
மாசம் இருக்க
முன்னமே ஒக்காந்துட்டா
மாெற செய்ய மாமனும் இல்ல
பூவச்சு அழகு பாக்க
காெல்லயில பதிஞ்ச
காெடியும் பூக்கவில்ல