காதல்
மலர்ச்சோலை அதில் எத்தனையோ எத்தனையோ
பூச்செடிகள் கொடிகள் அத்தனையும் வசந்தத்தில்
பூத்துக் குலுங்கி விண்ணளவு நறுமணம் பரப்ப
ஒருதனிமரம் தனித்து நின்றது தனித்து
தனது பூவின் தனிஅழகிலும் அது
பரப்பும் சுகந்தத்திலும் அதுவே செண்பகம்
அதுபோலத்தான் அதோ போகும் பெண்ணவளும்
என்னவள் அவள் எத்தனை அழகு
மங்கையர்கள் நடுவிலும் தன் தனி அழகால்
அந்த செண்பகம் போல தனித்து நிற்பவள்
அவள் கண்களில் தெரியும் ஒளியே அத்தனி அழகு