எனை மறந்தாயே

நீ என்னிடத்தில் இருக்கிறாய்!
எனை சுற்றியே நீ மட்டும் இருக்கிறாய்!

திரும்பும் திசையெல்லாம் நீ தானே..!
உன்னை காண தினம்தோறும் வியந்தேனே..!

என் துக்கத்திற்கு துணையாய் இருந்தாய்!
என் கண்ணிருக்கு விடையாய் இருந்தாய்!

நான் வாட நீ உடைந்தாய்!
நான் மகிழ நீ மறைந்தாய்!

என் நேரமும் வெறுக்க வாழ்க்கையும் உதைக்க..
ஏன் என் நிழலை துரத்தினாய்.. ? !!

எத்துன்பத்திலும் தோல் கொடுத்த நீ..
என் மரணத்தை மறந்தாயே ..!

இத்தகைய காதலா என் மீது உனக்கு?!!
இத்தனை காதலா என் மீது உனக்கு?!!!...
#என் தனிமையே. .

எழுதியவர் : ஹரி கிருஷ்ணன் ஆ (19-Jul-21, 8:56 pm)
சேர்த்தது : V A ஹரி கிருஷ்ணன்
Tanglish : yenai maranthaaye
பார்வை : 432

மேலே