கண்ணீருடன்
என் செவிகளைச் சுற்றி
மரணக் கவிதைகள்
மொய்த்துத் திரிகின்றன
என் செவிகளைச் சுற்றி
சங்காதமரணக் கவிதைகள்
மொய்த்துத் திரிகின்றன
வருந்துகைப்படும் பொழுதுகூட
இடைவிடாமல்
நச்சரிக்கின்றன..
யார், எவர் எனத்
தெரிந்துகொள்ளும்
அவகாசமும்
கொடுப்பதில்லை..
எந்த மரணத்திற்காக
அழுவது அல்லது
அழுகிறோம் என்றுகூடத்
தெரியவில்லை...
சுற்றி முழங்கும்
ஓலங்களில்
இப்போதைய
மற்றொரு மரணச் செய்தி
செவியில் கேட்கவில்லை..
மரண தேவனே!!!
உன் மாய விளையாட்டை
நிறுத்து...