மதிபலம் நிஜபலம்
மதிபலம் நிஜபலம்
சென்ஸஸ் கணக்கு எடுப்பவர்கள் வயது நாற்பதை தாண்டியவர்கள்; மூன்று பொம்பளைகள் வந்து கதவைத் தட்ட ; சோமசுந்தரம் திறந்தான் □□ வீட்டில் எத்தனை பேர் இருக்கிறீர்கள்□□ என்று கேட்டார்கள் ; ஒரு வகையில் அவர்கள் பரிட்சமானவர்கள் தான்
□□ மி...சோமசுந்தரம்...அண்டு...மை...துணைவி காயத்திரி தட்ஸால் □□ என்றான் சோம சுந்தரம்
□□ அப்போ....உங்க துணைவியார் எங்கே; அவங்களை கூப்பிடுங்கள்□□ என்றார்கள் ( முதலில் துணைவியை சொல்லாமல், மைத்... துணைவியை சொல்கிறான், வெட்கங்கெட்டவனுங்க; ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசமாக அனுப்பி வச்சிட்டாங்க போல இருக்கு, பாவம் அவனோட மாமியார்; நிறைய பொண்ணுங்களை பெத்து வச்சிருக்காங்க போல இருக்கு, அவங்களும் என்ன பண்ணுவாங்க பாரம் குறையட்டும் என்று அனுப்பி வச்சிட்டாங்க போல இருக்கு, பெயரைப்பாரு இடுப்பில் கட்டிக்கிற சோமத்தை தனக்கு பெயராக சோம சுந்தரமாம், தோளில் போட்டுக்கொள்ளும் துண்டு சுந்தரம் என்று இன்னும் யாராவது இருப்பார்களோ என்னவோ என்று கிசுகிசுத்துக் கொண்டார்கள்)
சோமசுந்தரம் அவரோட துணைவியை அழைத்து கொண்டு வந்தான்
□□ இப்படி வாம்மா... □□ என்று தனியாக அழைத்து □□என்னம்மா உங்க புருஷன் முதலில் உங்க பெயரைச் சொல்லாமல், உங்க தங்கச்சியை சொல்றார் , பாத்தும்மா, உசாரா இரு, இல்லேன்னா உன் தங்கச்சியே உங்களை வெளியே போடி என்று சொல்லிவிடப்போறா□□ என்று சொன்னார்கள்
□□ ஐயய்யோ அவரை நீங்கள் தப்பா நெனைச்சிக்கிட்டு இருக்கீங்க அவருக்கு மைத்துனைவிகளே கிடையாது, நான் ஒரே பொண்ணு தான் எங்க வீட்டில் □□
□□நானும் மைத்....துணைவியும் இருக்கிறோம் என்றாரே □□
□□ஐய்யோ அவரு வெளி நாட்டில் வளர்ந்தவர், வெளிநாட்டில் படித்தவர் இப்போது தான் என்னை கட்டிக்க ; இங்கே செட்டில் ஆனவர் ; அதனால் இப்போது தான் தமிழை பேச கத்துக்கிறார், என்னோட துணைவி என்று சொல்லத்தெரியாமல் ஆங்கிலத்தில் மை...துணைவி என்று சொல்லி இருக்கிறார், அது உங்களுக்கு தப்பா பட்டு இருக்கு, □□
□□அப்படியா....சரிமா...சரிமா...புரிந்து கொள்ளாமல் கேட்டு விட்டேன் தப்பா நெனைச்சிக்காதேம்மா □□
□□புரியாமல் தானே கேட்டீர்கள் இதில் தப்பா நெனைச்சிக்க என்ன இருக்கிறது □□
□□ ஆமாம் எங்களை பார்த்து அவர் மூக்கை பொத்திக் கொண்டாரே அது ஏன் ? □□
□□ அது உங்களைப் பார்த்து மூக்கைப் பொத்தவில்லை என்னோட நாத்தனார் வீட்டுக்கு வராங்க போல இருக்கு அதை நான் தெரிந்து கொள்ளத்தான், அவர் மூக்கைப் பொத்தி காட்டி இருக்கிறார் நாத்தம் நாற வறாங்க என்று அதை நான் தெரிந்து கொள்ளவே □□ என்றாள்
□□ சரியான வில்லங்கமான ஆளு போல இருக்கு, உன் கணவர் □□ என்றார்கள் கணக்கு எடுக்க வந்தவர்கள்
இதை கேட்டுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு கிழவி
□□ இவளுங்க கணக்கெடுக்க வந்தாளுங்களா; இல்லை நல்லா இருக்கும் குடும்பத்தை கலவரம் பண்ணி கெடுக்க வந்தாளுங்களா ; தப்பானவளுங் களுக்குத்தான்; எதைப் பார்த்தாலும் தப்புத்தப்பாவே கண்ணுக்கு தெரியும் போல் இருக்கு , பொம்பளைங்க இதே ஊர் பொம்பளைங்கதானே அதான் தொணத்தொணன்னு பேசுறாளுங்க , அரைகுறை ஆங்கிலத்தை கத்துக்கிட்டு வெள்ளையனைப் போல் காட்டிக் கொள்கிறவங்க மத்தியில் , அரைகுறை தமிழைக் கத்துகிட்டு நானும் தமிழன் தான் என்று காட்டிக் கொள்வதை கண்டு பெருமை படாமல் நக்கல் பேசுறாளுங்க □□ என்றாள் கிழவி
சோமசுந்தரத்திற்கு ஐம்பது ஏக்கர் நஞ்சையும்; ஐம்பது ஏக்கர் புன்ஜையும் இருக்கிறது, இது தாத்தாவின் சொத்து அவர் காலமாகி விட்டதால் இங்கே செட்டில் ஆக வேண்டிய கட்டாயம், அவற்றை இது நாள்வரை பாது காத்துக் கொண்டிருந்தவர், அப்பாவும் தாத்தாவுக்கு முன்பே போய் சேர்ந்து விட்டதால் இங்கே வரவேண்டி இருந்தது
மனைவி முழுகாமல் இருக்கிறாள்; ஆனால் சோமசுந்தரம் ஆண்மையை இழந்தவன் என்பது ஒரு மூன்றே மூன்று பேருக்கு மட்டும் தான் தெரியும்; ஒன்று கடவுள், இரண்டாவது வெளிநாட்டு டாக்டருக்கு, மூன்றாவது அவனுக்கு மட்டும் டாக்டர் சொன்னதால் தெரியும்
பிள்ளைகள் ஆண்டுக்கு ஒன்று என்று ஆறு பிள்ளைகள் ஆகிவிட்டது; சொத்துக்களை கணக்கு பண்ணி பிள்ளைகளை பெற்று இருக்கிறாள், □□ வெளிநாட்டில் இருந்தவன், அந்த டாக்டர் சொன்னது பொய்யோ, பணம் பிடுங்க இருக்கிறதை பறக்கிறது என்கிறானுங்க; பறக்கிறதை இருக்கிறது என்கிறானுங்க ; எனக்கும் பிள்ளைகள் பிறந்து தானே இருக்கிறது □□ என்று சந்தோஷம் பட்டுக்கொண்டான்; ஆதலால் இதை சர்வசாதாரணமாக எடுத்துக்கொண்டு காலத்தை ஓட்டினான்
மனைவியோடு அன்னொன்னியமாக இருக்க தயங்க மாட்டான், எதற்காகவும் மறுக்க மாட்டான், அன்பு காட்ட மறக்க மாட்டான் , பிள்ளைகள் பெரியவர்கள் ஆனார்கள், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை எந்த குறையும் வைக்காமல் செய்து வந்தான்
அப்போதுதான் சோம சுந்தரத்திற்கு தெரிய வந்தது மனைவியின் சுயரூபம்; ஆறு பிள்ளைகளும் எனக்கு பிறந்த பிள்ளைகள் இல்லை என்று , இப்போது தானே தெரிய வந்தது
□□ பன்னிரண்டு ஆண்டுகளாக ஒருவனை காதலித்துக்கொண்டு இருந்தவளை, என் சொத்துக்காக, அவனை ஓரங்கட்டி வைத்து விட்டு, என் தலையில் குல்லா கவிழ்த்து இருக்கிறார்கள் சும்மா சொல்லக்கூடாது புத்திசாலிகள் கெட்டிக்காரர்கள் □□ என்று சோமசுந்தரத்திற்கு நினைவுகள் ஓடியது
இடையில், பிரச்சினையை கிளப்பினார்கள் பிள்ளைகள் சொத்தை பிரித்து கொடுக்கச்சொல்லி, அப்பாவிடம் கேட்டார்கள், அப்பா மறுதளித்தார், பிள்ளைகள் சொன்னார்கள் □□ வாங்க வேண்டிய விதத்தில் வாங்கிக்கொள்ளலாம் வாங்கடா □□ என்று பிராது கொடுத்தார்கள் வழக்கு கச்சேரி படிக்கட்டு ஏறியது
□□ நியாயப்படி அவர் பெற்ற பிள்ளைகளுக்கு சொத்தை பகிர்ந்து கொடுப்பதுதான் நீதியும் ஞானமும் கூட , கணம் நீதி பதி அவர்கள் ஞாயமான தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது நீதிபதி அவர்களே □□ என்றார் லாயர்
□□மிஸ்டர் சோமசுந்தரம் தாங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா□□ நீதிபதி கேட்டார்
□□ ஐயா இன்றுவரை தேனழித்து வந்தவன் நான் , இங்கே விரலை சூப்புகிறவன் வேறு ஒருவன் போல் இருக்கிறது என் நிலமை , ஒரே ஒரு ரிக்வஸ்ட் அதை சபையில் சொல்ல விரும்பவில்லை, so whatever it may be, I showed in this petition please □□ என்று ஒரு கடிதத்தை கொடுத்தான் சோம சுந்தரம்
நீதி பதியிடம் கொடுக்கப்பட்டது, அவர் படித்து பார்த்து விட்டு....□□ ஓக்கே....ஐவில்...அரேஞ் ....பார்...இட் □□ என்றார்
எதிர் தரப்பு வக்கீல் எழுந்து □□ கணம் நீதிபதி அவர்கள் ரகசியமாக வழக்கை நகர்த்துவது சரியில்லை எனவே அக்கடிதத்தில் உள்ளது இன்னதென்று இந்த நீதி மன்றத்திற்கு தெரிந்து ஆக வேண்டும்□□ என்றார்
□□ ஓக்கே....ஓக்கே....□□ சோமசுந்தரம் கொடுத்த கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து கொடுக்க வைத்தார் நீதிபதி
அதைப் பார்த்து வக்கீலும் அடங்கிப் போய்விட்டார்
சோமசுந்தரத்தின் மனைவியிடம், □□ என்னம்மா இப்படி பண்ணிட்டிங்ளேம்மா □□ என்றார் , அவரின் தரப்பு வக்கீல்
□□ என்னபண்ணிட்டேன் நீங்க சொல்றது எனக்கு ஒன்னும் புரியவில்லை விவரமாகச் சொல்லுங்கள் வக்கீல் சார் □□ ஒரு பொம்பளை நினைத்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற தைரியத்தில்
□□ உங்கள் பிள்ளைகளுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர்கள் எனக்கு பிறந்தவர்கள் இல்லை என்று அடித்து சொல்லி இருக்கிறார் □□
□□ஆமாம்...நீங்கள் என்ன வக்கீல் , பிள்ளையை பொம்பளை தான் பெற்றெடுக்கனும், ஆம்பளையா பெற்றெடுப்பார் , அவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார், (வக்கீலின் காதில் வந்து) என்ன ராத்திரி அடிச்ச சரக்கு இன்னும் இறங்கவில்லையா □□
□□ ஏன் இப்படி கேழ்கிறீங்க □□
□□ இல்லை நெல்லு வக்கீலா; சாமை வக்கீலா; வரகு வக்கீலா இல்லை கேப்பை வக்கீலா என்று தெரிந்து கொள்ளத்தான், ஏன்னா கடைசியில் சாணம் ஆகிவிடக்கூடாது இல்ல அதுக்கு □□
□□ சட்டம் படித்த வக்கீல்ங்க □□
□□ கிழிச்சீங்க.....ஒரு சட்டம் படித்த வக்கீல் , இப்படி குட்டம் பிடித்தவன் போல் போய் ஒதுங்கி ஒதுங்கி நிற்க மாட்டான், எப்படி எதை வைத்து அவர் அப்படி சொன்னார், அதை நீங்கள் நம்பிவிட்டீர்கள், அதனால் என்னை நம்பவைக்க முயற்சி செய்தால் நான் ஒத்துக்கொள்ள வேண்டுமா; அவர் என்னிடம் எப்படி எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்பது எனக்கு மட்டும் தானே தெரியும்; □□
□□ உங்க பிள்ளைகள் உங்க பிள்ளைகள் தான் அதாவது அவருக்கு மட்டும் பிறந்தவர்கள் தான் என்று நிருபிக்க உங்க கிட்ட என்ன ஆதாரம் இருக்கு காட்டுங்க, இல்லை சொல்லுங்க□□ என்றார் வக்கீல்
சோமசுந்தரத்தின் மனைவி கொஞ்சம் திக்குமுக்காடினாள் வக்கீல் புரிந்து கொண்டார்
□□ எப்படி சொல்றது அவர் என்னோடு களவி புரிந்தது உண்மை, அதை படம் எடுத்து காட்டக்கூடிய சங்கதி இல்லை □□
□□ சரிம்மா அதை நிரூபிப்பது எப்படி அதைச் சொல்லுங்கள்□□ என்றார் வக்கீல்
மறு பேச்சு இல்லை , சூழ்நிலை மாறும் போது, பேசும் பேச்சில் வார்த்தை மாறும், அவ்வளவு ஏன், அவர்கள் பாவனையே மாறும் , அதை வைத்து தான் ஒருவர் குற்றவாளியா இல்லையா என்று கண்டுபிடிக்கிறார்கள் என்பதை நன்கு புரிந்து கொண்டாள், அமைதியாக நின்றாள்
சோமசுந்தரத்தை ஃபிராடு பண்ணமுடியாத, பணத்திற்காக ஆட்டுகிற பக்கமெல்லாம் ஆடாத, கடமையை, கடவுளாக மதிக்கும் டாக்டரை சல்லடை பிடித்து சலித்து எடுத்த டாக்டரிடம் பரிந்துரைத்தார் நீதிபதி அத்தோடு நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது
டாக்டர் தனது காகிதத்தை சமர்பித்தார்,
சோமசுந்தரம் சந்தர்ப்பம் சூழ்நிலையால் கணவனாக ஆக்கப்பட்டார், ஆனால் அவர் ஆண்மையை இழந்தவராக இருப்பது, நிருபிக்கப்பட்டு இருக்கிறது, ஆகையால் பிள்ளைகள் அனைத்தும் அவருக்கு பிறந்தவர்கள் இல்லை என்பது நிரூபிக் கப்படுகிறது, எனவே யாருக்கோ பிறந்த பிள்ளைகளுக்கு தனது சொத்தை பிரித்து கொடுக்க கேட்பது எந்த வகையிலாவது ஞாயம் இருக்கிறதா இருந்தால் நிருபிக்கலாம் என்றார் எதிர் தரப்பு வக்கீல்
□□ சோமசுந்தரத்தின் மனைவி கர்ப்பம் தறித்து இருக்கும் போதே அவர் அவரது மனைவி மேல் சந்தேகம் கொண்டு அவரை விட்டு விலகி இருந்து இருக்கலாம் அல்லது விவாகரத்து கோரி இருக்கலாம் அவர் அப்படி செய்யாதிருந்ததின் உள் நோக்கம் என்ன □□
□□ கல்சர் வெளிநாட்டு கல்சர் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம், அதைத்தான் அவர் கடைபிடித்து இருக்கிறார், அதனால் அவர் கண்டுக்கொள்ளவில்லை, அவர் மனைவியை முழுக்க நம்பினார்; அந்த நம்பிக்கைக்கு கிடைத்த சன்மானம் இது; மேலும் அது அவர்களின் உரிமை, அதை கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரம் அங்கே எந்த யாருக்கும் கிடையாது, சகிப்புத்தன்மை இல்லாவிட்டால் நடையைக்கட்டி இருக்கலாம் , ஏன் அவர் அப்படி செய்யவில்லை, ஓ....வழி தெரியவில்லையா □□
மன்றத்தில் அமைதி நிலவியது, கிசுகிசுத்துக் கொண்டார்கள்,
அந்த பிள்ளைகள் மிஸ்டர் சோமசுந்தரம் பிள்ளைகள் இல்லை என்று டாக்டர் ரிப்போர்ட் தெளிவாக குறிப்பிட்டுள்ளது , அவர் வெளிநாட்டில் வசிக்கும் போது பிராயத்தில் அவருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணத்தால் ஆண்மையை இழந்து இருக்கிறார், அங்கத்திய ரிக்கார்டுகள் இதைத்தான் குறிப்பிட்டு இருக்கிறது, இதை நீதிபதியிடம் பாஸ் பண்ணுங்கள் என்று கொடுத்தார்
நீதிபதியின் பார்வைக்கு பிறகு அழகாக தீர்ப்பை வழங்கினார், அதில் சோமசுந்தரம் விடுபட்டார்
உங்கள் பிள்ளைகளின் தந்தை யார்தான் என்று கேட்கப்பட்ட போது
நான் தான்....ஆமாம் நானே தான் நாங்கள் இருவரும் பன்னிரண்டு ஆண்டுகளாக பழகிக் கொண்டவர்கள் திடீர் என்று சோமசுந்தரத்திற்கு மனைவியாக்கப்பட்டு விட்டாள் கல்யாணம் முடிந்து விட்டது, என்னால் ஒன்னும் பண்ண முடியவில்லை; அவளின் கண் முன்னாடியே விஷத்தை குடித்து விட்டேன்; எப்படியாவது செத்து தொலையட்டும் என்று தெரியாதது போல்; விட்டு விட்டு போய் இருக்கலாம்; என் மேல் கொண்டிருந்த காதலால்; தூக்கி வாரி ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினாள்; ஆனாலும் எங்கள் ராஜாங்கமான தொடர்பு கள்ளத்தொடர்பு என்று பெயர் பெற்றது, என்னால் தான் ஏற்பட்டவர்கள் பிள்ளைகள் என்ற விஷயம் வெளிப்பட்டுவிட்டது, டி.என்.ஏ. டெஸ்ட்டும் என்னைத்தான் குறிப்பிடுகிறது, அதனால் என் காதலியை எனது மனைவியாக்கிக் கொள்ள எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை; என்பதை தங்கள் முன் பதிவு செய்கிறேன் என்றான் முன்னாள் காதலன்
அதைக்கேட்டு சோமசுந்தரம் விவாகரத்து பத்திரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டான்
காதலனும் காதலியும் இணைந்து கொண்டார்கள்
பிள்ளைகள் தாயை பார்த்து நீ எங்களுக்கு தாயே இல்லை; எங்களை என் பிள்ளைகள் என்று சொல்லாதீர்கள்; கடவுளே இப்படிப்பட்ட தாய்வயிற்றில் எங்களை ஏன் பிறக்க வைத்தீர்கள்; நாங்கள் அப்படி என்ன பாவத்தை செய்து இருந்தோம் எங்களை அவமானத்தால் தண்டிக்கிறாய் என்று புலம்பி தாயை விட்டு பிரிந்து போனார்கள்
கல்யாணம் வேண்டாம் என்று தலப்பாடாய் அடித்துக்கொண்டிருந்தேன்;
யாரும் கேட்க தயாராக இல்லை;
நான் எதற்காக கல்யாணம் வேண்டாம் என்கிறேன்;
என்ற காரணத்தையும் என்னால் சொல்ல முடியவில்லை, எனது மானம் மரியாதை எல்லாம் பறிபோய்விடுமோ என்னவோ என்று பயந்து;
வலிய கட்டிவைத்து என் நிம்மதியை கெடுத்து விட்டார்கள் என்று தனியாக அமர்ந்து யோசித்து கொண்டு இருந்தான் ஒப்புக்கு கணவன் , மதிபலம் வென்று நிஜபலம் ஆனது
□
ஆபிரகாம் வேளாங்கண்ணி
கண்டம்பாக்கத்தான்