இளமை நோய்
" இருபதில் பறந்து,
நாளை என ஒன்று
இருப்பதை மறந்து,
சுவைத்தாய் 'இளமை விருந்து'!
காலம் அது கடந்து,
நாலும் நடந்து முடிந்த பின்
அறுபதில் எழுந்து,
அனைத்தையும் துறந்து
கொதிப்பதேன் சினந்து?,
இருபதில் அமைதியாய் இருந்து,
யோசனை செய்தாயா? வாழ சிறந்து,
'
ஒழுக்கமே' இளமை நோய்க்கு 'மருந்து'!
அதை கொஞ்சம் உண்டிருந்தால்
ஞானம் பிறந்து,
வெற்றி கண்டிருப்பாய்
'அறிவில் சிறந்து. "