சவரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(’க்’ ‘ற்’ வல்லின எதுகை)
(‘ர்’ இடையின ஆசு)
துக்கம் விரணந் தொடைவலிசூ லங்காசந்
தற்கால சாந்தஞ் சவரத்தால் - மிக்குடற்குக்
காந்திமனப் பூரிப்பு கண்ஒளிவு காமமுண்டாஞ்
சே’ர்’ந்ததிங்கட் கொன்றிரண்டாந் தேர்
- பதார்த்த குண சிந்தாமணி
மாதத்திற்கு இரண்டு முறை செய்து கொள்ளுகிற சவரத்தினால் மனத்துயரம், புண், தொடை நோய், குத்தல், இருமல் ஆகியவைகள் சற்றுக் குறையும்; ஒளியும், மனக்கிளர்ச்சியும், விழிக்கு ஒளியும், தாக விருத்தியும் உண்டாகும்