முன்னோர் பழமொழி

மனிதனின் மெய் வாய் கண் மூக்கு செவியால் உலகில்
பலதும் மடிகிறது.

நேரிசை வெண்பா

மச்சம் பெரிதாம் ருசிக்க வதுசாம்
அச்சவோசை யாலசுணம் மாண்டேகும் --- துச்சத்தேன்
வண்டு மணத்தால்யா னைக்குழியால் சாமென்பர்
கண்டொளி விட்டிலும் சாம்

ருசியால் மீனும் வாசனையால் வண்டும் ஒசையால்
அசுணப் பறவையும் மனிதக் கைக்குழியால் யானையும்
ஒளியால் விட்டில் பூச்சியும் சாகுமென்பது பழமொழி.

மனிதன் மெய் வாய் கண் மூக்கு செவி யால் உணரும்
செய்கை மீன் வண்டு பறவை தேன்வண்டு விட்டில்
ஆகியவை இறந்து போகின்றன.

எழுதியவர் : பழனி ராஜன் (3-Aug-21, 8:59 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : munnor pazhamozhi
பார்வை : 58

மேலே