உலக ஐசுவரியம் 8

நேரிசை ஆசிரியபபா

ஐசுவர் யம்வந் துவிட்ட தென்பார்
என்னடா இங்கே உன்ரா சாங்கம்
என்றும் சொல்வர் அந்த ராசாங்
கம்செய் யுமரசே கொண்டான்
சகலவை சுரியமும் படைத்தவன் பாரே

குறட்பாக்கள்

எட்டுவித ஐசுரியம் செய்வர் தனித்தனியே
கிட்டியதை வைத்துமே யிங்கு

தனவந் தர்பலர் மன்னர் நிகரவர்
ஐசுவர்ய வானென் றழை

மக்களை சொல்படி ஆட்டுவித் தவரையும்
ஐசுவர்ய வானென் றழை

உறவை யுமணைத்து ஒன்றாக்கி வாழ்வனை
ஐசுவர்ய வானென் றழை

வயலில் அளவிலா வைத்தறுப்பன் நெல்லவனும்
ஐசுவர்ய வானென் றழை

நவரத் தினச்சுரங் கமணி செய்வோனும்
ஐசுவர்ய வானென் றழை

பொன்னையும் தன்வசம் கோடியில் வைத்திருப்பான்
ஐசுவர்ய வானென் றழை


வாகனம் வைத்துபோக மாய்வாழ்வன் பாரவனை
ஐசுவர்ய வானென் றழை

பத்துநூற்பேர் வைத்து படியளப்பன் பாரவனை
ஐசுவர்ய வானென் றழை.............

எழுதியவர் : பழநி ராஜன் (4-Aug-21, 8:32 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 18

மேலே