எலி இறைச்சி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
எலிஇறைச்சி குன்மம்பி லீகம் உரநோய்
நலிவித் திரப்புண் நமைச்சல் - மெலிவோட்டும்
மீதுமட்டி டாப்புளகம் மேவச்செய் யும்புணரத்
தாதுவுக்கும் புஷ்டிதருந் தான்
- பதார்த்த குண சிந்தாமணி
இது குன்மம், பீலிகம், மார்புவலி, பிளவை, தினவு இவற்றை நீக்கும்; உடலைப் பருமனாக்கும்; வீரிய விருத்தி செய்யும்