தாய்மை
புன்னகைப் புரையோடிய
பூவிதழ்கள்...
திலகம் தியாகித்த
திசையறியா நெற்றி...
வெறுமை வெதும்பிய
விழிக் குழந்தைகள்....
விடைத்து அடங்கும்
வெற்று நாசிகள்....
செவித் துளை வழியே
தெறியும் புறக்காட்சி....
வறண்டு பற்றுபிடித்த
குழல் சென்நிறமாக....
ஆடையின் கிளிசல்களின்
எண்ணிக்கை ஆயிரம்
தொடும் உடுப்பு....
ரவிக்கையின் கிளிசல்களை
மறைக்க போர்த்திய,
கிளிசல் நிறைந்த முந்தானை
கடமை தவறிய நிலையில்...
குருதி கொப்பளிக்கும்
உள்ளங்கை சித்தாள்
வேளையின் அன்பளிப்பு....
வெற்றுப்பாதம் மருதனையில்
சிவந்த குதிகால்கள்
கற்கள் பதம் பார்த்ததால்....
ஆயினும் அவள் கரங்கள்
அதிவேகமாக சுழலும்
ரங்க ராட்டினமாக....
பசித்து, புசிக்கக்
காத்திருக்கும் உதிரத்தின்
நினைவு மட்டுமே
அவள் நினைவுதனில்
விஸ்வரூபமாக.....