மாலை பொழுதின் மயக்கதில்

அழகான மாலை பொழுது
செந்நிற மேனியோடு கதிரவன்
கால் தடம் மறையும் நேரம்
நானோ வயல்வெளிகளில்
கால்நடைகளை மேய்த்துக்கொண்டு.....

மாலைபொழுதென்பதால் கால்நடைகளை
இருப்பிடம் நோக்கி திசை
திருப்பி கொண்டிருந்த அந்நேரம்
எங்கிருந்தோ வந்த மேக
கூட்டகளின் திடீர் முற்றுகையிட்டது.....

மெல்ல இருள தொடங்கியது
வயல்வெளி-தென்றல் காற்றும்
தன் வேகத்தை கூட்டியது
பனித்துளியாய் ஆரமித்த மழைத்துளி
வயல்வெளிஎங்கும் தன் கால் தடத்தை
தண்ணிராய் பதிய வைத்தது.....

கனமழை கையில் குடைகூட இல்லை
மரகுடையில் கால்நடைகளோடு
சேர்ந்து நனைந்து கொண்டிருந்தேன்.....

மழையின் வேகம் அதிகரிக்க
காற்றோடு கைகோர்த்து கொண்டது
இடியும் மின்னலும்....

தூரத்தில் ஒரு பெண்
தன் தாவணியின் ஒரு தளவால்
தலையை மூடிக்கொண்டு நான்
நிற்கும் இடம் நோக்கி
விரைந்து வந்தாள்-அருகில்
வந்தவளின் முகம் பார்த்தேன்
ஆஹா என் அருமை காதலி....

எங்கேயோ ஆடுக்கு புல்
எடுக்க வந்தவள் மழைக்கு
தப்பிக்க நினைத்து என்னிடம்
மாட்டி கொண்டாள் வசமாக..

கால்நடைகலுக்கு மத்தியில்
மழை மேகதை முறைத்து
பார்த்தபடி என் காதலி
நானோ அவளை ரசித்தபடி....

காற்றின் வேகம் அதிகரிக்க
குளிரில் தேகம் நடுங்க
எங்கிருந்தோ வந்த காற்று
அவளின் தாவணியை
பரித்து சென்றது-தன்
கைகளால் மார்பை
இருக அணைத்து கொண்டு
வெட்கதில் தலை குனிந்தாள்....

மழை எங்களை நனைக்க
என்னை விட குளிரில் அதிகமாய்
நடுங்கிகொண்டிருந்தாள் அவள்.....

ஓரமாய் நின்ற அவளை
சாரல் காற்றும் இடி சத்தமும்
என் அருகே வர செய்தது...

இருவரும் மிக அருகருகே
அவளின் கைவிரல்கள்
நடுக்கதில் தாளம்போட
என் பற்களோ பதிலுக்கு
ராகம் பாடியது...

என் மூச்சுகாற்று
அவள் முகதில் பட்டு
முனுமுனுக்க வைதது
அவள் உதடுகளை....

என்னில் ஏதோ உணர்சிகளை
மழைதுளி தூண்ட என்
விரல்கள் அவளை தொட
நினைத்த போது
ஆக்ரோசமாய் அருகில் விழுந்த
இடியால் அவளே என்னை
இருக அணைத்து கொண்டாள்....

மழைதுளி எங்களை நனைக்க
நான் அவளை இருக
அனைத்து கொண்டு தடுமாரி
கிழே விழுன்தேன்....

விழுந்து எழுந்து அவள்
இடையில் கை வைத்து
நிமிர்ந்து பார்த்தேன் அவள்
உதடுகள் படபடவென்று
துடிக்க என் உதடும் அதை
பதம் பார்க்க முற்பட்டது....

முற்பட்ட வேலையில் என்
முதுகில் யாரோ உதைபது
போன்ற உணர்வு பதறியடித்து
எழுந்து பார்தேன் என்
அப்பா பகல்லே என்னட தூக்கம்
சீமான் வீட்டு பிள்ளைனு நினைபோ
என்று சொல்லிகொண்டு
வீட்டுகுள் சென்றர்....

நானோ மரதடி நிழலில்
கயத்து கட்டிலில் மல்லாக்க
படுத்து கொண்டு கனவில்கூட
காதலிக்கு முத்தம் கொடுக்க
விடமாடாங்கபோல என்று புலம்பியபடி
மாலை பொழுதின் மயக்கதில்
பகல் கனவை தொடர்ந்தேன்......

எழுதியவர் : பாலமுதன் ஆ (5-Aug-10, 7:33 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 784

மேலே