இன்புறா வேர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
இன்புறா வேரை யிதமாய் அருந்தினர்க்குப்
பின்புறா தையமொடு பித்தமுமே - துன்பாம்
இருமல் சுவாசம் எரிசுரம்வ யிற்றுப்
பொருமலுப்பி சம்பறந்து போம்
- பதார்த்த குண சிந்தாமணி
இது கபம், பித்தம், இருமல், ஈளை, பித்தசுரம் வயிற்றிரைச்சல், விக்கல் இவற்றை நீக்கும்