எங்கே தொலையுமடா
ஒன்னோட முட்டமுழி கண்ணைக்
காட்டிட்டு
என்னோட உள்மனசை மாத்திட்டு
போவாதடா...
கொலவையில் கொட்டி வெச்ச
நெல்ல
உலக்கையில் உறிச்சி வெச்ச
உமிய
தட்டி தட்டி தவிடுபொடி போல ஆள ஆக்காதடா...
மண் தாகத்துக்கு வானம் எப்பொ
மழைய பொழியுமடா
நதிநீர் அதன்வழியில் எப்பொ
கடலை சேருமடா
அலைய கடல் எப்பொ
கரைய சேர்க்குமடா
அதுபோலவே
உன் காதல்
எங்கே தொலையுமடா ...
அது கல்யாணமாகுமா இல்லை
கடைசிவர செல்லுமா ...
உன் அன்பாலே அதிகமாச்சட
தொல்லையடா...