இழிவு அழிக்கப்படும்

இறைவா எப்படி இவ்வளவு பொறுமை சாலியாய் உள்ளாய்
குறைவாய் நன்றியின் குணமுள்ள மனிதரின் சிற்றறிவு செயலினையும்
பற்றில்லா அழுக்கு மனத்தின் பெரிய நடிப்பைச்
சிதைக்காமல்

மன்னிப்பு கேட்கும் உயிரை மரியாதைக் கேணும் மதிக்காமல்
பன்றியின் போக்குபோல் பயப்படாமல் பலவாறாய்
கருணையை சிதைக்கும்
உன்னிப் பிறப்பெடுத்த மறைவுத் தொழிலில் குதுகலிக்கும் மனிதஇழிவை

வாழவிட்டு அரசின் பல்வேறு பதவிகளில் அமரவைத்து இருப்பதும்
உழைத்து உயர்வோரை அவ்விழிவிடம் ஏச்சோடே பேச்சால் இம்சையுர
வழிவகை செய்துள்ள இறையே நீயோ எவ்வளவு பொறுமைசாலி

சாமபேத தானதண்டம் என்ற வரைமுறையை கடக்கும் எவரையும்
நேரங்காலம் பார்க்காமல் தண்டிக்க பாதிக்கப்பட்ட எவ்வுயிறும் முயலும்
அங்கே இறையே அச்சந்தராதே மனதிற்கும் உடலுக்கும் இழிவு அழிக்கப்படும்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Aug-21, 6:47 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 62

மேலே