சுதந்திரம் பெற்றோம், சுதந்திரமாய் வாழ கற்றோமா

ஓராண்டு இல்லை தம்பி நூறாண்டு என்று
பிரிட்டிஷ் நம்மை ஆட்டி வைத்ததே அன்று
ஒற்றுமை குலைந்தது கலாச்சாரம் அகன்று
இதை நினைத்தாலே மனம் குமுறுது இன்று... (ஓராண்டு இல்லை)

சுதந்திர உணர்ச்சி என்ற தீபம் ஏந்தி
நடை போட்டார் மஹாத்மா காந்தி
துப்பாக்கி முனையில் போர் புரிய
போஸும் முனைந்தாரே உலகறிய (ஓராண்டு இல்லை)

திலகர் ஒரு பக்கம் கூக்குரலிட்டர்
சந்திரசேகர் ஆசாத் உயிர் விட்டார்
சர்தார் படேல் போர்க்கொடி ஏந்தினர்
லால் பகதூர் பிரிட்டிஷை சாடினார் (ஓராண்டு இல்லை)

கவிஞர்களின் மையில் சுதந்திர வெறி
மகாகவி பாரதிதான் இதில் மிகவும் குறி
எவ்வளவு மனிதர்கள் குடும்பத்தை மறந்து
உயிரையும் தியாகம் செய்தனர் துணிந்து (ஓராண்டு இல்லை)

விண்ணை பிளந்தது சுதந்திர முழக்கம்
தொடர்ந்தது ஒத்துழையாமை இயக்கம்
பலதேசத்தலைவர்களின் ராஜதந்திரம்
இவற்றால் கிட்டியது இந்திய சுதந்திரம் (ஓராண்டு இல்லை)

74 வருடங்கள் உருண்டு ஓடிவிட்டது
இந்தியா பூரண குடியரசு ஆகிவிட்டது
ஆனாலும் வறுமை இன்னும் படுத்துது
பிறப்பதை குறைப்பதே இனி அடுத்தது (ஓராண்டு இல்லை)

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (11-Aug-21, 10:29 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 3642

மேலே