ஆனந்த சுதந்திரம்
"எப்படி வந்தது சுதந்திரம் ?
மந்திரமும் இல்லை, எந்த தந்திரமும் இல்லை !
'மூச்சு விடும் எந்திரம்' என நம்மை நினைத்த, அன்னியரையே வியக்க வைத்த,
ஒரு சொல் 'வந்தே மாதரம்'
அதை மனங்களில் சிந்தி,
'அகிம்சை' எனும் விசித்திர
ஆயுதமதனை கைகளில் ஏந்தி,
கண்ணீரும், செந்நீரும் இட்டு,
தண்ணீர், ஆகாரம் விட்டு,
'வீரம்' பெற்றுத்தந்த சுதந்திரம்!
உயிரையும் பெரிதாக கருதாத 'மனத்தீரம்' பெற்றுத்தந்த சுதந்திரம்!
ஆடிப்பாடி அதை கொண்டாடினால்
மட்டும் போதுமா ?
ஓடி, ஓடி உழைத்த தியாகிகள் திண்டாடியது ? அதற்கு பதில் என்ன ?
'சுதந்திரம் நம் பிறப்புரிமை' அதை அடைந்து விட்டோம் !
சுதந்திர நாட்டை காப்பதும் நம் கடமை அதை மறந்து விடலாமா ?
சமூக சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் , தார்மீக சுதந்திரம், தன்மான சுதந்திரம், பெண்இன சுதந்திரம், இன்னும் இன்னும் பல சுதந்திரம்!
அவையும் பெற, ஒன்றாக உழைப்போம்!
நல்ல குடிமக்களாய். அந்த கடமைகளை நன்றாக செய்து முடிப்போம்!
தாய் நாட்டை மேன்மேலும் வளர்ப்போம்!
--------------