கவிதைக்குள் கணிதம் 2
கவிதைக்குள் கணிதம்(2)
சற்சதுரம், நீள்சதுரம்
இரட்டைப் பிள்ளைகளாம்.
சேர்ந்தே ஒரு நாள்,
நிலத்தில் பெரு வட்டம் ஒன்று கீறி,
அதனுள்ளே கெந்திப் பிடித்து விளையாடி,
களைப்போ என்னவோ! கால்களை நீட்டி வட்டத்தில் வைத்தே,
அவர்கள் கீறிய வட்டத்துக்குள்ளேயே,
கண் அயர்நதனவாம்.
பறந்து சென்ற பறவைகள் பார்த்துச் செல்ல,
ஒன்று மட்டும் பார்த்ததாம்
புது வடிவம் ஒன்று,
பார்த்த முகம் தெரிந்த முகம்,
பெயர் மட்டும் தெரியவில்லை என்றே,
கொப்பொன்றில் அமர்ந்து சிந்தித்து - பின்
நான் கண்ட வடிவம் என்ன?
அதன் பெயர் தான் என்ன?
கூறுங்கள் மனிதர்களே எனச் சொல்லி,
பறந்து சென்றது அக்குரிவி.
: டைவி
ம்ணகோண்எ - nogatco
ஆக்கம்
சண்டியூர் பாலன்.