கதிரவன் கதிரினால் கதிரது - ஆசிரியப்பா

கதிரவன் கதிரினால் கதிரது செழித்திட
மதியது குளிர்வைபோல் மனமது மகிழ்ந்திட
நதியது விரைவென உறவது குவிந்திட
குதிருள் நெல்மணி நிறைந்ததாய் உவகை.

சிறுபெரு மலர்களில் செழித்திடும் சுவைத்தேனை
சிறுசிறு துளிகளாய் குவிக்கும் ஈநிரை
சுறுசுறுப் பினாலே எங்கும் சுற்றியே
அறிவியல் வியந்திடும் உணவை ஆக்குமே.

பனையென உயர்ந்திடு மனமதை நிறுத்தியே
மனையதில் மகிழ்வது தவழ்ந்திட பொறுமையும்
நினைத்திடும் நொடிகளில் இனிமையும் கிடைத்திட
அனைத்தையும் எளிதென அணுகிடின் நலமே.

வாழ்வையும் வளஞ்செய் யவேண்டுமே சலிவிலா
உழைப்பும் அஞ்சா உள்ளமும் மனமுமே
விழையும் எச்செய லெனினும் துணிவாய்
முயலின் ஓடிடும் பயமும் அகன்றே.

நல்லதாய் செழிப்பாய் வேம்பினை நட்டுமே
இனிப்பாய் பற்பல திரவமும் தெளித்தே
தேனும் நெய்யும் பாய்ச்சியே வளர்த்தால்
மாறுமோ குணத்தில் அதுபோல் மாந்தரே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (22-Aug-21, 3:49 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 39

மேலே