கத்தி ஒன்று
கத்தி ஒன்று
தொண்டை குழி
மேல் கத்தியை
வைத்தவுடன்
உங்களுக்கு யாரை
பிடிக்கும்? என்று
கேட்கிறது
எனக்கு பிடித்தது
கத்தி வைத்தவனுக்கு
பிடிக்காமல்
போய்விட்டால்..!
எனக்கு எல்லோரையும்
பிடிக்கும் சமாளித்து
தப்பிக்க
அதுவும் சரிதான்
சார்
தொண்டை குழியிலிருந்து
முடியுடன் கூடிய
சோப்பு நுரையை
வழித்து எடுத்து
வெளியே வீசியது
நாவிதனின் கத்தி