கோபம் கொள்ளாதே
கோபம் கொள்ளாதே;
நீ கோபம் கொள்ளாதே;
கோழையாய் இருந்தாலும், ஏழையாய் இருந்தாலும்
கோபம் கொள்ளாதே
கோபம் கொள்ளாதே;
நியாயமாக இருந்தாலும்,
நீயும் கோபப்பட்டு அழிந்து போக நினைக்காதே.
கோபம் கொள்ளாதே கோடானு கோடி பிரச்சனைகள் வந்தாலும், கோபம் கொள்ளாதே.
கோபத்தில் இல்லை பிரச்சனைகளுக்கு தீர்வு;
எனவே கோபம் கொள்ளாதே.
கோபத்தீயை தீண்டாதே;
கொலுந்துவிட்டு எரியும், கோபத்தை தீண்டாதே.
கோபத்தைக் கொட்டாதே;
நீயும் கோபத்தைக் கொட்டாதே;
குறைகள் குற்றங்கள் இருப்பினும்,
கோபத்தைக் கொட்டாதே.
கோபத்தைக் காட்டாதே;
கோபத்தைக் காட்டாதே;
சாபத்தை வாங்காது இருக்க,
சாத்தான் போன்று சதிசெய்யும் கோபத்தைக் கொட்டாதே.
கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டாதே;
வாரி இறைத்த, வார்த்தைகளை,
திரும்பப் பெறமுடியாது;
வழக்கு எதுவாயினும்,
வார்த்தைகளால் எரிக்காது
கோபத்தைக்கொட்டாதே.
கோபத்தை மூட்டாதே;
கொட்டித்தெரிக்கும், மழையைப்போன்று
சட சடவென்றே பேசி; கோபத்தை மூட்டாதே.
கொள்கையில்லா மனிதன்,
குறையுள்ள மனிதன்.
எனவே கோபப்படாதே.
வேகமாய் வரும் வார்த்தைகள் வேதனையைத் தான் தரும்;
குரோதம் வேர் ஊன்றிவிடும்;
கோபத்தைக் கொட்டாதே.
முறுக்கி வரும் கோபம்,
உறவை நறுக்கி விடும்;
எனவே கோபம் கொள்ளாதே.
உண்மை உன்பக்கம் இருப்பினும்,
உணர்வுகளை அடக்கி,
உன்னுள் கோபம் கொள்ளாதே.
உயிரைக்கொள்ளும் விடமே கோபம்;
உன்னுள் இருந்து,
கோபம் உன்னைக் கொள்ளவேண்டாம்!
எனவே கோபம் கொள்ளாதோ.
கோபம் ஒரு சாபம்
எனவே சினம் கொள்ளாதே; சீற்றம் கொள்ளாதே;
பொய்க்கோபமோ, மெய்க்கோபமோ,
கோபம் கொள்ளாதே;
கோபத்திற்குபின் நியாயம் உண்டு,
கொடூரத்திற்குப் பின், கொடுமைகள் உண்டு,
இருப்பினும்
கோபம் கொள்ளாதே.
கொட்டும் தேளிலும் கொடியது கோபம்;
எனவே கோபம் கொள்ளாதே.
கோபம் கெடுக்கும்,
அன்பு கொடுக்கும்;
எனவே கோபம் கொள்ளதே
தாயின் கோபம் தனிந்துவிடும்;
தந்தையின் கோபம், தாங்கிவிடும்;
குழந்தையின் கோபம், குறைந்துவிடும்;
மனைவியின் கோபம், மழுங்கிவிடும்;
கனவனின் கோபம் எரிந்து விழுந்துவிடும்;
நட்பின் கோபம்,
கடந்துவிடும்;
உறவின் கோபம், உதிர்ந்துவிடும்;
உற்றார் சுற்றாரின் கோபம் உறங்கிவிடும்.
பகையின் கோபம் படர்ந்து; பழி தீர்த்துக்கொள்ளும்
எனவே கோபம் கொள்ளாதே.
கடிந்து பேசாதே;
கனிந்து பேசு.
உடைந்து போகாதே;
உருகிப்பேசு.
சினந்து பேசாதே;
சற்றே சிந்தித்து பேசு.
வெறுத்து ஒதுங்காதே;
வேதனையை
குமுறலைக் கொட்டாதே.
குறை கண்டுபிடிக்காதே;
குற்றமே இருப்பினும்;
குறை கண்டுபிடிக்காதே;
குறையிலும் நிறைவைக்தேடு;
கோபமும் குழைந்துவிடும்.
குறைந்துவிடும்;
குணம் வந்து குடிகொண்டுவிடும்;
கோபமும் விலகி ஓடி,
கோடி நன்மைபயக்கும்;
எனவே கோபம் கொள்ளாதே;
கோபப் தீயை மூட்டி வெறுப்பு
புகையை புகைக்காதே;
கோபம் கொள்ளாதே,
கொந்தளிக்கும் கோபத்தில்
கொஞ்சம் கொஞ்சம் ஒட்டியிருக்கும்
நிம்மதியையும் நிரந்தரமாக இழந்து விடுவாய்,
எனவே கோபம் கொள்ளாதே.
கொளுந்து விட்டு எரியும் உன் கோபத்தில்
முதலில் எரிந்து சாம்பல் ஆவது நீயும், உன்னை சுற்றி உள்ளவர்கள் தான்;
எனவே கோபம் கொள்ளாதே.
கோபம் கொலை செய்யவும் தூண்டும்;
எனவே கோபம் கொள்ளாதே;
கோபம் சில நொடியே;
சீற்றம் சினத்தால் வந்த
கோபத்தின் கொடூரம்
பல ஆண்டுகள் தொடரும்;
எனவே கோபம் கொள்ளாதே.
உடமை போனால் கோபம்;
உரிமைபோனால் கோபம்;
தோல்வியில் கோபம்;
தொல்லையில் கோபம்;
படைத்தவம் மீது கோபம்;
வாய்ப்பு நழுவிப் போனாலும் கோபம்;
வாழ்க்கையின் மீது கோபம்;
வேண்டியவர் மீது கோபம்;
வேலைக்கார் மீது கோபம்;
பசி எடுத்தால் கோபம்;
படிப்பில் தோல்வி உற்றால் கோபம்;
சோதனை வந்தால் கோபம்;
வேதனையிலும் கோபம்;
வெறுப்பிலும் கோபம்;
வெறுப்பின் உச்சமே கோபம் .
பிறர் வெற்றி பெற்றால் கோபம்;
போட்டி பொறாமையினால் கோபம்;
தாமதம் ஆனால் கோபம்;
தவறுகள் நடந்தால் கோபம்;
தவறு இழைத்தவன் மீது கோபம்;
தள்ளிப்போனால் கோபம்;
தொலைபேசி கேட்பதில் கோபம்;
தொல்லை கொடுப்பதால் கோபம்;
பேராசையால் கோபம்;
பேசினால் கோபம்
பழிதீர்க்க கோபம்;
படைத்தவன் மீது கோபம்;
கேட்டு நேரத்தில் கிடைக்கவில்லை என்றால் கோபம்;
வீதியில் கோபம்;
வீட்டில் கோபம்;
விரட்டி வருவது,
கோபம் கோபம், கோபம்,
கோபமோ கோபம்.
கொடுக்கல் வாங்களில் கோபம்;
ஆட்சியாளனின் கோபம்;
குடிமக்களின் கோபம்;
முரடனின் கோபம்;
முட்டாளின் கோபம்;
படித்தவன் கோபம்;
பாமரனின் கோபம்;
பாட்டாளி மக்களின் கோபம்;
நாட்டிற்கு நாடு கோபம்;
உடமை போனால் கோபம்;
உரிமைபோனால் கோபம்;
தொல்லையில் கோபம்;
பெற்றோர்கள் மீது கோபம்;
பிள்ளைகள் மீது கோபம்;
பிறர் வெற்றி பெற்றால் கோபம்;
விரும்பியது நடக்கவிவில்லை,
கிடைக்கவில்லை என்றால், கோபம்;
விரக்தியால் கோபம்;
வீட்டார்மீது கோபம்
விலைவாசி ஏறினால் கோபாம்
உன்மீது கோபம், என்மீது கோபம்;
ஏறச் சொன்னால் ஏறச் சொன்னவன் மீது கோபம்;
இறங்கச் சொன்னால் இறங்கச் சொன்னவன் மீது கோபம்;
எடுத்ததற்கு எல்லாம் கோபம்;
எடுத்துச் சொன்னாள் கோபம்’
உன்னுள் கோபம்;
கோபம் கோபம் கோபம்.
கோபத்துடன் பேசும் போது நீ முட்டாளாகி விடுகிறாய் எனவே கோபத்தை விட்டுவிடு
குடியைக் கெடுக்கும் கோபத்தை விட்டுவிடு;
கோபத்தில் இல்லை குணம்; கோபப்பட வேண்டாம் தினம்.
சினத்தை விடுவோம்; சிகரத்தைத் தொடுவோம்.
கோபத்தை ஒழிப்போம்;
குதூகலமாய் இப்போம்.