கொட நாடு ஆயிரம் ஏக்கரில் எஸ்டேட்
வெள்ளையனே வெளியேறு சசிகலா
வெள்ளையனே வெளியேறு : சசிகலா
ஆனந்த்விகடன் தந்த விவரம்
ஆயிரத் எட்டு நூற்று முப்பது
நாடு விட்டு நாடு வந்து
ஊட்டிக் காட்டில் கொடநா டிடத்தை
வெள்ளையர் ஆட்சி யில்விலை பேசி
கிரயப் பத்திரஞ் செய்து கொண்டான்
ஓர்வெள் ளையன் போட்டி யின்றி
போட்டிக் குயாரிருந் தாரன் றில்லை
மொத்தக் காட்டின் பரப்பு
ஆயிரத் தறுபது ஏக்கர் நிலமே
காட்டை வெட்டித் தேயிலை தோட்டம்
நோட்டமாய் பயிரிட அழித்தான் பாரு
மலைவாழ் மக்களைக கூட்டி தீனி
போட்டு சம்பளம் கொடுத்து ஆண்டு
கணக்கில் காட்டை மேட்டைத் சீராய்த்
திருத்தி பாம்பு பல்லி நட்டுவா
புலியும் சிறுத்தைக் கரடி கொன்று
தரைமட் டமாக்கிப் பாதையும் போட்டான்
இருபத டிநீள ராஜ நாகம்
திரியும் காடு அந்நாள் தோட்டம்
ஆயிரம் ஏக்கர் தேயிலைப் பயிரை
பதப்படுத் தியேற்று மதிசெய் தாராம்
முந்நூ றுவருடம் கடினமாய்
பாடுபட் டானவ் விடத்தேத் தங்கிப்
பத்துப் பதினைந் துததலை முறையாய்
பாரத சுதந்திரம் பிடிக்காப் போக
ஊட்டி விட்டு பலவெள் ளையர்
ஓடிப் போனார் இங்கிலாந்
வந்தவி லைக்குத் தோட்டம் விற்றே
ஆயிரத் தறுபது ஏக்கரில் தோட்டம்
கிரெக்கென் பான்வசம் கொடநா டுமாம்பார்
தன்குடும் பமோடு தாயுடன் இணைந்துமே
கொடநாட் டிலிருந் தனராம் தங்கைகள்
மூவர் மணமாய் வெளியில் இருந்தார்
கிரெக் பாங்கிக் கடனில்
எல்லா காட்டையும் தோட்டமாக் கினாறே
தோழிகள் மும்முர மாக சொத்து
சேர்த்த தொண்ணூற் றைநது களிலே
பட்டது அவர்கண் ணிலிச் சொத்து
விடுவா ராவிடா நச்சரித் தாராம்
மதுவா லைமுத லையை விட்டு
மனமிலா மறுத்தார் கிரெக்கும் தொடர்ந்து
பதினைந் துபஸ்ஸில் ஆட்கள் கொணர்ந்து
அன்றா டமும்பார் தொல்லை
விற்கச் சொன்னார் ஐந்து வருடமாய்
கிரெக்குடை கடனை வசூலென பாங்கியை
விட்டு மிரட்ட மசியவில் லைகிரெக்
தங்கையர் மூவரை தனித்தனி மிரட்டல்
விட்டார் வெள்ளை யருக்கே மிரட்டலாம்
மிரண்டவர் கிரெக்கிடம் பங்கு கேட்டார்
கடைசியில் விற்றுத் தொலைத்தார்
ஆயிரம் கோடி சொத்தை
யேழுகோ டிக்கு மிரட்டிவாங் கினாரே
.......

