காந்தியின் வைஷ்ணவ ஜனதோ திருவள்ளுவரின் கருத்தே
காந்தி குஜராத் சபர்மதி ஆசிரமம் போனபோது கோட்டு வாத்திய நாராயண ஐயங்கார்
தன் கோட்டு வாத்தியத்தில் ,1460 வாக்கில் குஜராத் நர்சிங் மேதா என்பவர் இயற்றிப்
பாடிய வைஷ்ணவதோ ஜனனி என்ற பாடல் (திருக்குறளின் அறத்துபாலின் சிலக்கருத்து
பொதிந்த பாடல்களே) காந்திக்குப்பாடி வாசித்துக் காண்பிதாராம்.
காந்திக்கு பாடலின் கருத்தும் பாடலும் மிகவும் பிடித்துப் போய்விட அந்தப் பாடலை காந்தி
அடிக்கடி பாடச் சொல்லிக் கேட்பாராம்.
அதன் கருத்து ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ளதை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
(1)
The people of Vishnu, follower of Vishnu
Who feel the pain of others
Help those who are in misery
But never let self conceit , enter their mind.
(2)
They respect the entire world .
Do not disparage any one ,
Keep their words, actions and thoughts pure,
The mother of such a soul is blessed .
(3)
They see all equally, renounce craving
Respect other woman as their own mother
Their tongue never utters false words
Their hands never touch the wealth of others
(4)
They do not succumb to worldly attachment
They are firmly detached from the mundane
They are enticed by the name of Ram
All places of pilgrimmage are embodied in them
(5)
They have forsaken greed and deceit They stay afar from desire and anger
Narsing says - I will be grateful to meet such a soul
whose virtue liberates their entire lineage.
1.
வைணவர்கள் என்பார் விஷ்ணுவை வழிபடுபவர்கள்
மற்றவர்களின் துன்பங்களை தங்கள் துன்பமாக உணர்பவர்,
மற்றவர்களின் துன்பங்களில் மனிதாபிமானத்துடன் செயல்படுவர்
ஒருபோதும் தங்கள் மனதை கர்வத்தின் பக்கம் போக விடமாட்டார்கள்
2
இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவன்களையும் மதிப்பவர்கள்,
யாரொருவரையும் அவர்கள் நிந்திக்க மாட்டார்கள்,
தங்கள்மனம், வாக்கு , செயல்களைத் தூய்மையாக பார்த்துக் கொண்வார்கள்,i
இப்பட்டவர்களை ஈன்றத் தாயானவள் மிகவும் ஆசீர்வதிக்க பட்டவர்களாம்i
3
அனைவரையும் சமமாக பாவிக்கு மிவர்கள் எதற்காகவும் ஏங்கமாட்டார்கள்
மற்ற பெண்களைத் தங்கள் தாயாகவே மதித்து நடப்பார்கள்
அவர்களின் நாக்கு ஒருபோதும் பொய் வார்த்தைகளை உதிர்த்திடாது
மற்றவர்களின் உடைமைகளை ஒருபோதும் இவர்கள் தீண்ட மாட்டார்கள்
4
பந்த பாசங்களுக்கு அவர்கள் பணியமாட்டார்கள,
உலக வாழ்க்கையும் பற்றையும் துறந்து
ராம நாமத்தில் மயங்கி மூழ்கியிருப்பார்கள்
அனைத்து ஸ்தல யாத்திரைப் பயன்களும் இவர்களுக்குள் அடக்கம்
5
மற்றும் பேராசையையும வஞ்சகத்தையும் இவர்கள் துறந்தவர்கள்,
எதன்மீதும் பற்றும் விரோதமும் பாராட்டாதவர்கள்
நர்சி கூறுகிறேன் இப்படிப்பட்ட ஆத்மாவை நான் சந்தித்தால் கடமைபட்ட வனாவேன்
இந்த சிறப்பம்சம் பொருந்தியவரின் வம்சம் அனைத்திலும் விடுதலை பெற்றிடுமாம்
........