ரோஜாவும் ராணியும்

ரோஜா தோட்டத்தில்
என் இதய ராணியே
நீ மென்மையான
ரோஜாவின்
அழகை ரசித்து பார்த்து
அதன் வாசனையை
முகர்ந்து பார்க்க
ஆசைப்பட்டாய் ....!!

ஆனால் ..
ரோஜா மலரோ
மென்மையான
உன் இதழ்களின் சுவையை
சுவைக்க ஆசைப்பட்டது ....!!

அந்த நேரத்தில்
தேன் சுவைக்க வந்த
வண்டுகளுக்கு
ஒரே குழப்பம் ....!!

ரோஜா மலரில் இருக்கும்
தேனை சுவைப்பதா...!!
அல்லது
ரோஜா இதழ் போன்ற
உந்தன் இதழ்களில்
மறைந்து இருக்கும்
தேனை சுவைப்பதா ...!!

எதனை சுவைப்பது
என்று புரியாமல்
தலை சுற்றி
மயக்கம் கொண்டதாம் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-Aug-21, 9:03 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 125

மேலே