பாசம்
அகிலம் அனைத்தையும்
தன்னுள் அடக்கும்
ஒற்றைச் சொல்(பாசம்)!
சொல்லாமலே பிறருக்கு
உன் மனதை
அறிவுறுத்தும் கருவி(பாசம்)!
கருவியாக இதைக்கொண்டு
கயவர்கள் செய்யும்
களவானி தனங்கள்
அனேகம்.....
அனேகம் பேர்
இதற்காக ஏங்கித்
தவிக்கும் சூழல்
இவ்வுலகில்.....
இவ்வுலகில் இவ்வொற்றைச்
சொல் மந்திரத்திற்கு
மதியிழப்போரும் உண்டு!
விரோதித்து மதியிழப்போரும்
அனேகம் உண்டு!
உண்டென்று கூறும்
விவாதமும், இது(பாசம்)
இல்லை வெறும் வாய்ச்சொல்
என்பதுவும் சிலரின்
நம்பிக்கை.....
நம்பிக்கையும் இதுவும்(பாசம்)
உடன் பிறவா
சகோதரர்கள், ஒன்று
இருக்கும் இடத்திற்கு
மற்றொன்றும் வந்து
சேரும்.....
சேர்ந்து வாழும்
இடத்தில் தான் இது(பாசம்)
நிலைத்து இருக்கும்!
நிலைத்து இருக்கும்
இடத்தில் தான்
பரஸ்பரம் ஏற்படும்
பற்று.....
பற்றற்று பாசம் வைக்கும்
பதிவிரதை வாழ்வு
பாழாய் போனதாக
சரித்திரமே கிடையாது....
கிடையாது இதற்கு(பாசம்)
இணையான ஒரு
சொல் இப்புவியில்....
இப்புவியின் ஆதாரம்
இச்சொல்(பாசம்) ஒன்றே....
ஒற்றைச் சொல்லுக்காக
அனைத்தையும் இழந்தவர்
அனேகம், இவ்வுலகில்
இதை(பாசம்) மதியாது
தாண்டவமாடி இழந்தவரும்
அனேகம்....
அனேகம் உயிர்கள் உண்டு
இவ்வுலகில் இம்மந்திரச்சொல்(பாசம்)
கிட்டாது முதியோர் இல்லங்களிலும்,
குப்பைத் தொட்டிகளிலும்....
கிட்டியோர் அருமை உணரா
பிண்டமாகி துச்சமாக
வீசுவோர் தெரு புழுதியில்
இவற்றை.....
இவற்றில்(பாசம்) பண்பட்ட
மனதிற்கு, தாராது
வேறொன்றும் இன்பச்
சுவையை, இச்சுவைக்கு
ஈடாக.....
ஈடாகாது இவ்வகிலத்தின்
எவ்வுணர்வும் இப்
பெரும் மகிழ்வுக்கு!
ஆனந்தத்தில் திளைக்கும்
மனம், மனம்கொள்ளாமல்
இருக்குமே யாயின்
பாசம்!!
பாசத்துடன் பண்பும்
இணையுமே யாயின்
மானுடர் இல்வாழ்க்கை
பொன் மகுடத்தில்
பதித்த வைரமாக
மின்னும்.....