இரு உள்ளங்கள்

இரு உள்ளங்கள்

மயிலும் மயிலும்
சேர்ந்தது போல்,
உள்ளம் இரண்டும்
சேராதோ?

மயில் இறகின்
அழகு போல்,
உள்ளம் இரண்டும்
மாறாதோ?

மயில் ஆடுவது
போல்,
உள்ளம் இரண்டும்
ஆடாதோ?

மயில் உயரப்
பறப்பது போல்
உள்ளம் இரண்டும்
பறக்காதோ?

கேட்டது போல்
எல்லாம் நடந்தால்!!
அங்கே வானத்தில்,

மயில் ஏறிடும்
முருகன் வள்ளி போல்,
காட்சி அளிக்குமே
நம் உள்ளங்கள்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (30-Aug-21, 5:34 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : iru ullangal
பார்வை : 236

மேலே