மரம்

"மரம்"

"மரம்' வளர்த்திடு தம்பி!
வீட்டிற்கு ஒரு ' மரம் ' வளர்த்திடு தம்பி!

உன்னில் ' அறம் ' வளர்ப்பதை
போல ,
மண்ணில் ' மரம் ' வளர்த்திடு
தம்பி !

விண்ணில் உறையும்
' பரம்பொருள் ' நம்மை காக்க
மறந்திட்டாலும் ,
தன்னில் வளரும் மரம்
' தன் பொருள் ' தர மறவாது
தம்பி!

' கண்ணில் ' வைத்து
காத்திட்டால் அது,
' பொன்னினும் ' மேலான
பலன் தரும் தம்பி !

' வாழ்வில் தரம் ' வேண்டியது போல,
' வீட்டில் மரம் ' வேணும் தம்பி!"

எழுதியவர் : (31-Aug-21, 11:01 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : maram
பார்வை : 135

மேலே