காற்று வரட்டும்

காற்று வரட்டும்

அந்த கதவை
திறவுங்கள்
காற்று வரட்டும்

வாழ்க்கை சிக்கல்
வலை போல்
சுற்ற

மனதில் குப்பைகள்
குவிந்து கிடக்க

மூச்சு திணறலின்
மூழ்கி இருக்கும்
எண்ணங்கள்
விழித்தெழ

கதவை தட்டும்
காற்றின் சத்தம்

கொஞ்சம்
திறந்து விடுங்கள்
காற்று வரட்டும்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (1-Sep-21, 8:02 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kaatru varattum
பார்வை : 71

மேலே