பாலூற்றுபாலியலுக்கு

ஆண்களே
அழகைரசித்து
அடையதுடிக்கும்உன்கண்கள்

எனது
மறைவானஇடத்தை
எட்டிஎட்டி
மறைந்துமறைந்து
பார்க்கதுடிக்கும்
உன்நெஞ்சம்

முதலிரவில்
ஆனமட்டும்ஆள
முட்டிகசக்கிபிழிந்தவலியும்

முதல்குழந்தையைபெற்றெடுக்க
வெட்கத்தைவிட்டு
உரித்தகோழியாய்
ஒட்டுதுணியில்லாமல்
ஓரமாய்படுத்தவலியும்

பையில்குழந்தை
பக்குவமாய்வராதுஎன்றதால்
அடிவயிற்றைஅறுத்தவலியும்

நீபார்த்திருந்தால்
என்னை
காதல்தீயால்
சுட்டெரிக்கமாட்டாய்
காமரசாயணத்தைஊற்றி
கருக்கிடமாட்டாய்

ஆண்களே
எங்களைதேவதைகளாய்
பாருங்களென்று
சொல்லவில்லை
உயிர்கொடுக்க
உபாதைபடும்
உயிருள்ளஜீவனென்று
உணர்ந்துக்கொண்டால்போதும்

கற்பழிப்பு
கனவிலும்வராது
உயிரோடு
எரிக்கும்எண்ணம்
ஒடம்புக்குள்ளும்ஓடாது
பாலியல்வன்முறை
பாடைக்குபோகும்வரை
உறுப்புக்குள்வந்து
உரசிபார்க்காது

எழுதியவர் : (4-Sep-21, 11:16 pm)
சேர்த்தது : பபூதா
பார்வை : 71

மேலே