தமிழின் மாத்திரை அளவு

நிலைமண்டில ஆசிரியப்பா

மாத்திரை கூறிடும் தமிழின் சூத்திரம்
மனதுள் வாங்கினால் நிகழும் அற்புதம்
நுண்ணிய அளவிலே வகுத்த மூத்தோரை
எண்ணியே தொழுது போற்றுவோம் தினமுமே.

மெய்யழுத் ததுப்பிறக் கும்நிலை அளவது
அரைநொடி நேரமே ஆகுமே இதற்கென
அரைமாத் திரையென் றேவகுத் தபடியால்
அதன்பலன் இதற்கென அலகிலை அறிவீரோ

குறிலது தமிழின் மூத்த பிள்ளையாம்
குறுகிய ஓசையை உடையது ஒலிப்பின்
தன்மையில் ஒருமாத் திரையள விலேயே
சொல்லிட நனிதமி ழர்கள் வைத்தரே..

நெடிலது வினாவையே எழுப்பிடும் எழுத்தாம்
இருபடி அளவிலே ஒலிவரும் இரண்டு
மாத்திரை அளவென தமிழறிந் தபலரால்
இலகுவாய் இயற்றிய இலக்கணத் தமிழே.

முப்படி உயரவே முயலும் போதினில்
அளபெடை எனும்முறை யிலேயே மூன்று
மாத்திரை அளவிலே பழகிட வழியையும்
தமிழ்மொழி வகுத்தே வைத்தது சிறப்பாய்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (7-Sep-21, 7:24 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 28

மேலே