தம்பிக்கு தலைதநத குமணன்
அகவற்பா
அந்நாள் வந்திலை அருங்கவிப் புலவோய்
இந்நாள் வந்தெனை நொந்துநீ யடைந்தாய்
தலைதனைக் கொண்டுபோய்த் தம்பிகை கொடுத்து
விலைதனை மீட்டுன் வருமைநோய் களையே
முதற் சங்க காலத்தில் வாழ்ந்த வள்ளல் குமணனை அவனது தம்பி சூழ்ச்சியால் வென்று
நாட்டை அபகரித்தான் குமணன் தன் நண்பர்களுடன் காட்டில் தஞ்சம் புகுந்தார்.
அந்த சமயம் ஒரு புலவர் குமணனை காட்டிலும் போய் சந்தித்து அவரைப் புகழ்ந்து
பாடி தமது வறுமையை எடுத்துரைத்தார் . குமணனோ நான் அரசனாக இருந்த போது
வராத புலவரே இன்று வந்தீரே என்று சொன்னார். பிறகு தம்பி அமணன் என்தலைக்கு
ஆயிரம் பொன் தருவதாக பறை சாற்றியுள்ளான். இந்தாரும் என்வாளைப் பிடியும்
என்தலையை வெட்டிக்கொண்டு இந்த வாளையும் காண்பித்து ஆயிரம் பொன்னைப்
பெற்றுக் கொள்ளும் என்று வாளைக் கொடுத்தனுப் பினானாம்